பி.பி.சி.க்கு எதிராக குஜராத் சட்டசபையில் தீர்மானம்!

பி.பி.சி.க்கு எதிராக குஜராத் சட்டசபையில் தீர்மானம்!

Share it if you like it

குஜராத் கலவரம் தொடர்பாக ஆவணப்படம் வெளியிட்ட பி.பி.சி. தொலைக்காட்சி நிறுவனத்துக்கு எதிராக குஜராத் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

2002-ம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் அரங்கேறியது. இதனைத் தொடர்ந்து, அம்மாநிலத்தில் கலவரம் ஏற்பட்டு, பலர் உயிரிழந்தனர். ஏராளமான பொதுச்சொத்துக்கள் நாசமடைந்தன. இந்த சம்பவத்தில் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். இந்த சூழலில், குஜராத் சம்பவம் நிகழ்ந்து 20 ஆண்டுகளுக்குப் பிறகு, அக்கலவரம் தொடர்பான ஆவணப்படம் ஒன்றை கடந்த ஜனவரி மாதம் வெளியிட்டது. அதில், குஜராத் கலவரத்தில் அப்போது அம்மாநிலத்தின் முதல்வராக இருந்த மோடிக்கு தொடர்பு இருப்பதாக சித்தரிக்கப்பட்டிருந்தது.

இதுதான் இந்தியாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்தியாவின் பிரதமர் மீது ஐரோப்பிய நாடு எப்படி குற்றம் சுமத்தலாம் என்று அரசியல் பிரமுகர்கள் முதல் சமூக ஆர்வலர்கள் வரை கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து, மேற்கண்ட ஆவணப்படத்திற்கு மத்திய அரசு தடை விதித்தது. ஆனாலும், தடையை மீறி பல இடங்களில் திரையிடப்பட்டு வந்தது. இதனிடையே, இங்கிலாந்து நாட்டு எம்.பி. ஒருவரே, அந்த ஆவணப்படம் பி.பி.சி. நிர்வாகத்தால் எடுக்கப்படவில்லை என்றும், தனியார் அமைப்பு மூலம் எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்ததோடு, தனது கண்டனத்தையும் பதிவு செய்திருந்தார். அதேபோல, இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில்தான், குஜராத் சட்டசபை கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் பா.ஜ.க. எம்.எல்.ஏ., ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தார். அதாவது, பிரதமர் மோடியின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பி.பி.சி. ஆவணப்படம் தயாரிக்கப்பட்டிருக்கிறது. ஆகவே, பி.பி.சி. தொலைக்காட்சி நிறுவனத்துக்கு எதிராக கடுமையான நடவடிக்கையை மத்திய அரசு எடுக்க வேண்டும் என்று கூறினார். இதைத் தொடர்ந்து, அத்தீர்மானம் குஜராத் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.


Share it if you like it