எல்லை பாதுகாப்பில் புதிய பரிமாணம் எடுக்கும் பாரதம்

எல்லை பாதுகாப்பில் புதிய பரிமாணம் எடுக்கும் பாரதம்

Share it if you like it

சமீப காலமாக உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் எல்லைப்புற இராணுவ போக்குவரத்து கட்டமைப்புகள் விஷயத்தில் மத்திய அரசு கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. வடகிழக்கு மாநிலமான அருணாச்சலப் பிரதேசத்தில் எல்லைப் பகுதியில் ராணுவ பயன்பாட்டிற்காக பல்வேறு சிறப்பு கட்டுமானங்களை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இதில் கடந்த காலங்களில் சீன ஆக்கிரமிப்பின் போது அருணாச்சலப் பிரதேசத்தில் தொடங்கி வடகிழக்கு மாநிலங்கள் முழுவதையும் இணைக்கும் சிக்கன் நெக் என்னும் கோழி கழுத்து பகுதி என்னும் குறுகலான இந்திய நிலப்பரப்பு முக்கியமானது. பெரும் சிக்கலும் சவாலும் நிறைந்த அந்த பகுதியில் தேச பாதுகாப்பு கருத்தில் கொள்ளப்பட்டு பல தரைவழி சாலை கட்டுமானங்கள் முன்னெடுக்கப்படுகிறது.

எல்லைப்புற நாடுகளுடன் தொடர்ச்சியாக அத்துமீறி ஆக்கிரமிப்பதும் பிற நாட்டு நிலப்பரப்புகளை தன்னுடைய நிலப்பரப்பு என்று சொந்தம் கொண்டாடி வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கும் சீனா தன் கைவரிசையை இந்திய நிலப்பரப்பிலும் காட்ட முயற்சித்து வருகிறது . முதலில் அருணாச்சல பிரதேசத்தை தனது சீனாவின் நிலப்பரப்பு என்று வரைப்படங்களை வெளியிட்டது. அடுத்த கட்டமாக அருணாச்சல பிரதேசத்திற்கு இந்தியாவிலிருந்து யார் போக வேண்டுமானாலும் அவர்களுக்கு சீன விசா வேண்டும் என்று குரளி வித்தை காட்டியது. இறுதியாக அருணாச்சல பிரதேசம் தொடங்கி வடகிழக்கும் மாநிலங்கள் முழுமையுமே கபளீகரம் செய்து அதை முழுமையான ஆக்கிரமிக்க தொடர்ச்சியாக முயற்சித்து வருகிறது. இதன் முன்னோட்டமாக 2004 முதல் 2014 வரையிலான பத்து ஆண்டு கால ஆட்சியில் சீன ஊடுருவல்களும் பல கிலோ மீட்டர்கள் ஊடுருவி வந்து சீன ராணுவ நிலைகளை நிலை நிறுத்துவதும் தினசரி செய்தியானது.

சீனாவின் எல்லைப்புற மாநிலங்களிலும் அருணாச்சல பிரதேசம் தொடங்கி வடகிழக்கு மாநிலங்கள் முழுவதிலும் சீன ஆக்கிரமிப்பிற்கு பெரும் நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் தரக்கூடியது பலவீனமான இந்திய எல்லைப்புற கட்டுமானங்கள் தான் என்பதை தற்போதைய மத்திய அரசு உணர்ந்து கொண்டுள்ளது. அதன் காரணமாகத்தான் கடந்த கால ஆட்சியாளர்களால் கிடப்பில் போடப்பட்ட இந்திய ராணுவத்தின் போக்குவரத்து கட்டமைப்புகள் மற்றும் சாலை கட்டுமானங்கள் அனைத்தும் போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றப்பட்டு வருகிறது. இதில் காஷ்மீர் மாநிலத்தில் மட்டும் லே – லடாக் – ஸ்ரீநகர் பகுதிகளை நிலவியல் ரீதியாக இணைக்கும் புதிய கட்டுமானம் முன்னெடுக்கப்படுகிறது. இந்த கட்டுமானம் பயன்பாட்டிற்கு வருமானால் அது இந்திய ராணுவத்திற்கும் காஷ்மீர் மாநிலத்தின் வளர்ச்சிக்கும் பாதுகாப்பிற்கும் பேருதவியாக இருக்கும். அடுத்த கட்டமாக முக்கியமான கேந்திர பாதுகாப்பு மையமாக விளங்கும் அருணாச்சல பிரதேசத்தின் சிக்கன் நெக் பகுதியில் தொடர்ந்து வரும் கட்டுமானமும் இறுதி கட்டத்தை எட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.

அருணாச்சலப் பிரதேசத்தின் எல்லைப் பகுதியில் ஒட்டுமொத்த வடகிழக்கு மாநிலங்களையும் தரை வழியில் இணைக்கும் விதமான நீண்ட தூர சாலை கட்டுமானம் நடைபெற்று வருகிறது. மிக உயர்ந்த மலைப்பிரதேசத்தில் சவாலான சீதோஷன நிலை இருக்கும் இடங்களில் நடைபெறும் இந்த கட்டுமானம் அதி நவீன தொழில்நுட்பம் வலுவான கட்டமைப்புகள் கொண்டு கட்டமைக்கப்படுகிறது. கடல் மட்டத்தில் இருந்து 13, 800 அடி உயரத்தில் அமைந்துள்ள செலாவில் என்னும் இடத்தில் 317 கிலோமீட்டர் நீளமுள்ள பலிபாரா – சர்துவார் – தவாங் குகை சாலையின் இறுதி பணிகள் பூர்த்தியாகும் நிலையில் மும்முரமாக பணிகள் நடந்து வருகிறது. அருணாச்சலப் பிரதேசத்தில் இருக்கும் ஷீலா கணவாய் சாலை உலகில் மிகப்பெரிய உயரமான சாலை. இந்த சாலை சீன எல்லை பகுதியான தவாங் பகுதியை நாட்டின் பிறப்பகுதியுடன் இணைக்கும் முக்கிய நிலவியல் பகுதியாகும்.

எல்லைப் பகுதியில் இந்திய ராணுவத்தின் இடப்பெயர்வு தளவாடங்கள் ஆயுதங்கள் போக்குவரத்திற்கு ஏதுவாக இந்த கட்டுமானம் முன்னெடுக்கப்படுகிறது. ராணுவ நிலைகளுக்கு தேவையான உணவு மருத்துவ பொருட்கள் உள்ளிட்டவைக்கும் இந்த தொலைநோக்கு சாலை உதவி கரமாக இருக்கும். ராணுவ பயன்பாட்டை கடந்து வடகிழக்கு மாநில மக்களுக்கும் நாடு முழுவதிலும் இருந்து வடகிழக்கு மாநிலங்களுக்கு பயணிக்கும் பொது மக்களுக்கும் சாலை போக்குவரத்து சரக்கு கையாளுகை சுற்றுலா மேம்பாடு என்று பல்வேறு வழிகளில் இந்த குகை வழி சாலை கட்டுமானம் உதவும்.

இந்த சாலை கட்டுமானம் மழை பெருவெள்ளம் சவாலான சீரோஷண நிலைகள் பனிப்பொழிவு பூகம்பம் உள்ளிட்ட பல்வேறு இயற்கை பேரிடர்களை கடந்து உறுதித் தன்மையோடு இருக்கும் வகையில் மிகவும் பாதுகாப்பான தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கட்டமைக்கப்படுகிறது. இதில் பல்வேறு நவீன யுக்திகளும் கட்டுமான தொழில்நுட்பங்களும் உலகத்தரம் வாய்ந்த கட்டுமான பொருட்களும் பயன்படுத்தப்பட்டு பணிகள் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த சாலை கட்டுமானத்தில் வடகிழக்கு மாநிலத்தில் சார்ந்த பெருவாரியான மக்கள் கட்டுமான தொழிலாளர்கள் என்ற வகையில் தொடர்ச்சியாக வேலைவாய்ப்பை பெறுகிறார்கள் . அவ்வகையில் பின் தங்கியிருந்தும் வடகிழக்கு மாநில மக்களுக்கு இந்த சாலை கட்டுமானம் தற்காலிகமான பொருளாதார தீர்வு வழங்கி இருக்கிறது‌ .இந்த சாலை கட்டுமானம் பூர்த்தியாகி பயன்பாட்டிற்கு வரும் போதும் போக்குவரத்து சுற்றுலா என்று பெரும் வளர்ச்சியை அம் மாநிலங்கள் பெறக்கூடும் .அது அம்மாநில மக்களுக்கு நிரந்தரமான பொருளாதார தீர்வாக அமையும்.

ஏற்கனவே பாரதத்தோடு தாய்லாந்து மலேஷியா உள்ளிட்ட நாடுகளை தரை வழியில் இணைக்கும் சாலைகளை கிட்டத்தட்ட பணிகள் முடிவுக்கு வரும் நிலையில் இருப்பதால் அதோடு இந்த சாலைகளும் இணைப்பு பெறும் பட்சத்தில் இந்த சாலைகள் பாரதத்தை கீழை நாடுகளுடன் இணைக்கும் பெரும் சாலை கட்டுமானமாக மாறும் . அது உலக அளவில் சரக்கு கையாளுகை போக்குவரத்து சுற்றுலா என்று பல்வேறு பயன்பாட்டிற்குரிய சாலை கட்டுமானமாக மாறும் பட்சத்தில் வடகிழக்கு மாநில மக்களுக்கு விவசாயம் தொழில் உற்பத்தி வியாபாரம் சார்ந்த பல துறைகளிலும் அசுர வளர்ச்சி பெறவும் பொருளாதார வளம் பெறவும் இந்த சாலை உதவும். எதிர்கால சந்ததிகளின் வளமான வாழ்விற்கும் பாரதத்தின் வலுவான பாதுகாப்பிற்கும் தொலைநோக்கு திட்டமாக கட்டமைக்கப்படும் இந்த திட்டம் வெற்றிகரமாக நிறைவேறவும் கூடிய விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரவும் நவராத்திரி நன்னாளில் தேசம் மூன்று தேவியரிடமும் பிரார்த்தனை செய்கிறது.


Share it if you like it