பி.எஃப்.ஐ. ‘இந்தியா விஷன் 2047’ சதித்திட்டம் அம்பலம்!

பி.எஃப்.ஐ. ‘இந்தியா விஷன் 2047’ சதித்திட்டம் அம்பலம்!

Share it if you like it

‘இந்தியா விஷன் 2047’ என்கிற பெயரில் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா (பி.எஃப்.ஐ.) அமைப்பு அரங்கேற்ற இருந்த சதித்திட்டம் அம்பலமாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பும், சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (எஸ்.டி.பி.ஐ.) கட்சியும், இந்தியாவில் பல்வேறு விரும்பத்தகாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக, ஹிந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்களை படுகொலை செய்து வருகிறார்கள். தமிழகத்திலும், கேரளாவிலும் பி.எஃப்.ஐ. மற்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சியினரின் அராஜகம் அதிக அளவில் இருந்து வருகிறது. தமிழகத்தில் சசிக்குமார், ராமலிங்கம் உள்ளிட்ட ஹிந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கொலை செய்யப்பட்டனர். அதேபோல, கேரளாவில் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர்கள் சஞ்சித், சீனிவாசன், பா.ஜ.வைச் சேர்ந்த ரஞ்சித் சீனிவாசன் உட்பட பலர் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

மேலும், டெல்லி, ராஜஸ்தான், குஜராத், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த ராமநவமி ஊர்வலம் மற்றும் ஹனுமன் ஜெயந்தி ஊர்வலம் உள்ளிட்ட ஹிந்து விழாக்களின்போது கல்வீசியும், துப்பாக்கியால் சுட்டும் கலவரத்தில் ஈடுபட்டார்கள். டெல்லியில் நடந்த சி.ஏ.ஏ.க்கு எதிரான கலவரத்தில் பெரும் பங்கு வகித்தது பி.எஃப்.ஐ. மற்றும் எஸ்.டி.பி.ஐ. ஆகிய பயங்கரவாத அமைப்பினர்தான் என்பது உளவுத்துறையின் தகவல். இதுபோன்ற செயல்களால், இவ்வமைப்பினரை பயங்கரவாத அமைப்பினர் என்றும், தடை செய்யப்பட வேண்டிய அமைப்புகள் என்றும், கேரள கோர்ட் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசும் மேற்கண்ட இரு அமைப்புகளையும் தடை செய்ய பரிசீலனை செய்து வருவதாக தகவல்.

இந்த நிலையில்தான், ஹிந்துக்களுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டியதாக பி.எஃப்.ஐ. அமைப்பைச் சேர்ந்த இருவரை பீகார் மாநில போலீஸார் கைது செய்திருக்கிறார்கள். ஒருவர், முன்னாள் காவல்துறை அதிகாரியான, ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த முகமது ஜலாலுதீன். இன்னொருவர் தடை செய்யப்பட்ட சிமி இயக்கத்தில் பணியாற்றி தற்போது பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா மற்றும் எஸ்.டி.பி.ஐ. இயக்கத்தில் செயல்பட்டு வரும் அத்தர் பர்வேஸ். இருவரும் பீகார் மாநிலத்தில் தற்காப்பு கலைகளை பயிற்றுவிப்பதாகக் கூறி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இஸ்லாமிய இளைஞர்களை வரவழைத்து ஆயுதப் பயிற்சி அளித்திருக்கிறார்கள்.

மேலும், ‘இந்தியா விஷன் 2047″ என்கிற திட்டத்தை வகுத்து ‘கோழை ஹிந்துக்களை அடிபணிய வைப்பதே குறிக்கோள்’ என்றும், ‘இந்த இலக்கை எட்டுவதற்கு 10 சதவிகித இஸ்லாமியர்கள் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பில் இணைய வேண்டும்’ என்றும், மத ரீதியான பல்வேறு கோஷங்களை முன்வைத்து ஹிந்துக்களுக்கு எதிராக இளைஞர்களை தூண்டிவிட்டதாகவும் பீகார் காவல்துறை தெரிவித்திருக்கிறது. மேலும், இவர்களில் அத்தர் பர்வேஸ் என்ற நபரின் சகோதரன், பீகாரில் 2001-ம் ஆண்டு நடந்த குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதியாவார். இதற்கான பல்வேறு ஆதாரங்களையும், ஆவணங்களையும் காவல்துறை கைப்பற்றி இருக்கிறது.

தவிர, தங்களது திட்டத்தை நிறைவேற்றுவதற்காக 8 பக்கங்கள் கொண்ட ஆவணத்தை அந்த அமைப்பினர் தயார் செய்து வைத்திருந்ததையும் போலீஸார் கைப்பற்றி இருக்கிறார்கள். அந்த ஆவணத்தில், துருக்கி உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகளின் துணையோடு, இந்தியாவை எதிர்த்து முழுமையான ஆயுதப் போராட்டத்தை நடத்த, படையை தயார்படுத்துவது குறித்து விரிவாக விளக்கப்பட்டிருந்ததோடு, இந்தியாவையும், ஹிந்துக்களையும் அடிபணிய வைக்க இஸ்லாமிய நாடுகள் உதவுமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதேபோல, தெலங்கானா மாநிலத்தின் நிஜாமாபாத் போலீஸார் கடந்த 6-ம் தேதி நடத்திய சோதனையில் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த ஷேக் ஷாதுல்லா, முகமது இம்ரான், முகமது அப்துல் மோபின் ஆகியோரை கைது செய்தது கவனிக்கத்தக்கது. இவர்கள் லோக்கல் இஸ்லாமிய இளைஞர்களை அழைத்து ஷரியத் சட்டத்தையும், இஸ்லாமிய அடிப்படைவாதத்தையும் போதித்து, இந்தியாவிற்கு எதிராக யுத்தம் புரிய ஆயுதப் பயிற்சியை அளித்தது தெரியவந்து கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஆக, பி.எஃப்.ஐ. அமைப்பை தடை செய்யாவிட்டால், இந்தியாவுக்கும் ஹிந்துக்களுக்கும் ஆபத்துதான் போல!


Share it if you like it