கல்லூரி மாணவர் மணிகண்டன் மரணம் குறித்து உண்மை கண்டறியும் குழு அமைத்த பா.ஜ.க தலைவர் அண்ணாமலை.
ராமநாதபுர மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன்முத்துராமலிங்க தேவர் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வரும் மாணவர் மணிகண்டன் (வயது 21). காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டு இருந்த பொழுது, சில மீட்டர் தூரம் தள்ளி தனது பைக்கை நிறுத்தியதற்காக நடுரோட்டில் போட்டு மாணவரை காவலர்கள் அடித்து உதைத்து உள்ளனர். அதனை தொடர்ந்து காவல் நிலையத்திற்கு மாணவரை அழைத்து சென்று அங்கேயும் அவர் மீது மிருக தனமாக தாக்குதல் நிகழ்த்தப்பட்டதால் தான் அவர் உயிர் இழந்தார் என ABVB மாணவர் அமைப்பின் தேசிய செயலாளர் அண்மையில் கருத்து தெரிவித்து இருந்தார். .
தனது மகன் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரின் தாய், உறவினர்கள், ஊர் பொதுக்கள், உட்பட பலர் தொடர்ந்து கருத்து தெரிவித்து வரும் நிலையில். தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அவர்கள் மணிகண்டன் மரணம் குறித்து விசாரணை நடத்திட பா.ஜ.க மாநில துணைத் தலைவரும் திருநெல்வேலி எம்.எல்.ஏ-வுமான நைனார் நாகேந்திரன் அவர்களின் தலைமையில் உண்மையை கண்டறியும் குழுவை நியமிப்பதாக தனது அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.