ரஹ்மத்துல்லா உடலை கொண்டு வர பா.ஜ.க. ஏற்பாடு!

ரஹ்மத்துல்லா உடலை கொண்டு வர பா.ஜ.க. ஏற்பாடு!

Share it if you like it

ஆஸ்திரேலியாவில் சுட்டுக்கொல்லப்பட்ட ரஹ்மத்துல்லாவின் உடலை தமிழகதிற்கு கொண்டு வர மத்திய அமைச்சருக்கு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வேண்டுகோள் விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தின் தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் சையது முகமது. இவரது, மகன் முகமது ரஹ்மத்துல்லா, கடந்த 2019-ம் ஆண்டு விசிட்டிங் விசாவில் ஆஸ்திரேலியாவுக்குச் சென்று இருந்தார். அந்தவகையில், அங்குள்ள உணவகத்தில் வேலை செய்து வந்திருக்கிறார். இந்த நிலையில், அந்நாட்டின் மிக முக்கிய நகரங்களில் ஒன்றான சிட்னி நகரில் அமைந்திருக்கும் அபர்ன் ரயில் நிலையத்துக்கு நேற்று மதியம் ரஹ்மத்துல்லா சென்றிருக்கிறார். அப்போது, அங்கு பணியில் இருந்த தூய்மை பணியாளரை அவர் குத்தியால் குத்தியாக சொல்லப்படுகிறது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் வந்து இருக்கின்றனர். அப்போது, ஆஸ்திரேலிய காவலர்களையும் ரஹ்மத்துல்லா கத்தியால் குத்தி இருக்கிறார். இதையடுத்து, தற்காப்புக்காக வேண்டி காவலர்கள் அவரை சுட்டு இருக்கின்றனர். இதனை தொடர்ந்து, காவலர்கள் ரஹ்மத்துல்லாவை மருத்துவமனைக்கு அழைத்து சென்று இருக்கின்றனர். எனினும், சிகிச்சை பலன் அளிக்காமல் அவரது உயிர் மருத்துவமனையில் பிரிந்தது.

இப்படிப்பட்ட சூழலில், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார் ;

ஆஸ்திரேலியாவில், துரதிர்ஷ்டவசமாக இந்திய குடிமகன் ஒருவர் உயிர் இழந்துள்ளார். இதனை, உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.
தமிழகத்தைச் சேர்ந்த முகமது ரஹ்மத்துல்லா என்பவரை ஆஸ்திரேலிய காவல்துறையினர் சிட்னியில் சுட்டுக்கொன்றதாக உள்ளூர் செய்திகள் தெரிவித்துள்ளன. இதன் பின்னணியில், உள்ள காரணம் உறுதியாகத் தெரியவில்லை.

முகமது ரஹ்மத்துல்லாவிற்கு இறுதி மரியாதை செலுத்த வேண்டும். எனவே, அவரது உடலை தாயகம் கொண்டு வருவதற்கு ஆவணம் செய்ய வேண்டும். அந்தவகையில், ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய தூதரகத்திற்கு தாங்கள் உடனே உத்தரவிட வேண்டும். இந்த துயரமான நேரத்தில் தங்களது உதவி அவரது குடும்பத்திற்கு தேவை என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.


Share it if you like it