பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அவர்கள் தி.மு.க அமைச்சர்கள் செய்யும் தவறுகளை ஆதாரத்தோடு தொடர்ந்து சுட்டிக்காட்டி வருவது தி.மு.க-வினர் மத்தியில் பெரும் சலசலப்பை உருவாக்கி வருகிறது.
திமுக தனது பத்தாண்டு பசியை 1 ஆண்டு முடிவதற்குள் காட்டி விட வேண்டும் என்கிற நோக்கத்தில் மிக தீவிரமாக செயல்பட்டு வருகிறதோ என்னும் ஐயம் தற்பொழுது தமிழக மக்கள் மத்தியில் எழுந்து வருகிறது. தி.மு.க ஆட்சியில் நிகழும் தவறுகளையும், அடாவடிகளையும், பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அவர்கள் உடனுக்கு உடன் சுட்டி காட்டுவதுடன் தனது டுவிட்டர் பக்கத்திலும் அந்த தவறை பதிவிட்டு நாட்டு மக்களுக்கு தொடர்ந்து வெளிச்சம் போட்டு காட்டி வருகிறார் என்பது யாவரும் அறிந்ததே.
தமிழக மின்சாரத்துறை அமைச்சரின் துறையில் மிகப் பெரிய முறைகேடு நடந்து உள்ளது. இதனால் அரசிற்கு மிகப் பெரிய இழப்பு ஏற்பட்டு உள்ளது என்று அண்மையில் ஆதாரத்தோடு சுட்டி காட்டி இருந்தார் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை. அதிமுக-வில் இருந்த பொழுது செந்தில் பாலாஜியை வறுத்தெடுத்த இதே தி.மு.க நிர்வாகிகள், கழக தொண்டர்கள், ஆதாரம் எங்கே? என (11.05) அமைச்சருக்கு முட்டு கொடுத்து பா.ஜ.க தலைவரிடம் டுவிட்டரில் கம்பு சுற்றி வருகின்றனர்.
இந்நிலையில் போக்குவரத்து துறை அமைச்சர் இராஜ கண்ணப்பன் அவர்கள் அரசு ஊழியர்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்புகளை வழங்குவதற்காக தனியார் நிறுவனத்திடம் ஆர்டர் செய்து இருந்தார். இதில் மிகப்பெரிய தவறு நடந்து உள்ளது என்று பா.ஜ.க தலைவர் அண்ணாமலை சுட்டி காட்டி இருந்தார். இதனை தொடர்ந்து தமிழக முதல்வர் போக்குவரத்து ஊழியர்களுக்கான இனிப்புகளை ஆவின் நிறுவனத்திடமிருந்தே பெற வேண்டும் என்று அமைச்சரின் முடிவிற்கு எதிராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்து உள்ளார். அண்ணாமலையின் தொடர் குற்றச்சாட்டால் மற்ற அமைச்சர்கள் மத்தியில் பெரும் பீதி ஏற்பட்டு உள்ளதாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.