அண்ணாமலை எச்சரிக்கை:   முதல்வர் சரண்டர்!

அண்ணாமலை எச்சரிக்கை: முதல்வர் சரண்டர்!

Share it if you like it

கனிமவள கடத்தலை தடுக்கவில்லை என்றால், நானே களத்தில் இறங்குவேன் என தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறினார். இந்த நிலையில், தமிழக அரசு அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையில் விடியல் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சி மக்கள் விரும்பும் ஆட்சியாக இல்லை என்பதே பலரின் கருத்தாக உள்ளன. கொலை, கொள்ளை, திருட்டு மற்றும் பெண்கள் பாதுகாப்பில் குளறுபடி என சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்து வருகிறது. இதுதவிர, அடாவடி, கட்டபஞ்சாயத்து தொடர்ந்த வண்ணம் உள்ளன.

இதனிடையே, பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கனிமவளங்கள் அதிக அளவு கேரளாவிற்கு கடத்தப்படுகின்றன என்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படன. இதனை, முற்றிலும் தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். எனினும், இதற்கு விடியல் அரசு செவிசாய்க்கவில்லை என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில், கடந்த பிப்-26- ஆம் தேதி கிணத்துக்கடவு பகுதியில் தமிழக பா.ஜ.க. மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. இந்த, ஆர்ப்பாட்டத்திற்கு அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார். இதையடுத்து, அவர் பேசும் போது இவ்வாறு கூறினார் ;

கனிமவள கடத்தலை இன்னும் 20 நாட்களுக்குள் முற்றிலும் தடுக்க வேண்டும். இல்லையெனில், 21-வது நாள் சோதனை சாவடிகளில் பா.ஜ.க. தொண்டர்களோடு தொண்டனாக நானும் களம் இறங்குவேன் என தி.மு.க. அரசிற்கு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்த நிலையில், மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தலின்படி, பொள்ளாச்சி கோட்டத்தில் உள்ள சோதனைச்சாவடிகளில், கிராம நிர்வாக அலுவர்களை கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து, வருவாய் துறை அதிகாரிகள் கூறியதாவது ;

மாவட்ட நிர்வாகம், புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குனர் மற்றும் சப் –கலெக்டர் அறிவுறுத்தலின்படி, கிராம நிர்வாக அலுவர்களை கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

கேளர மாநில எல்லையில் அமைந்துள்ள சோதனைச்சாவடிகளில், அனுமதியின்றி சாதாரண கற்கள், கிராவல் மண் ஆகியவற்றை, கடத்துவதை தடுக்கும் வகையில், வாகன தணிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

இதற்காக, கிராம நிர்வாக அலுவர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். நேற்று முதல் கண்காணிப்பு பணியில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொள்ளாச்சி தாலுகாவில், நடுப்புணி மற்றும் கோபாலபுரம் சோதனைச்சாவடிகளில், இரண்டு ‘ ஷிப்ட்களாக கண்காணிப்பு செய்யப்படுகிறது. கிணத்துக்கடவு தாலுகாவில், சொக்கனூர் வீரப்பகவுண்டனூர் சோதனைச்சாவடிகளில் மூன்று ஷிப்ட்களாக கிராம நிர்வாக அலுவர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.

அதுபோல, ஆனைமலை தாலுகாவில், மீனாட்சிபுரம், செமணாம்பதி சோதனைச்சாவடிகளிலும், மூன்று ஷிப்ட்களாக கிராம நிர்வாக அலுவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சோதனைச் சாவடிகளில் வாகனங்களை தணிக்கை மேற்கொள்வர் என தெரிவித்தார்.


Share it if you like it