சிதம்பரத்தில் உள்ள இரண்டு கோவில்களை இடிக்கும் முடிவை தள்ளி வைத்த தமிழக அரசு.
ஹிந்துக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி கோவில் நகைகளை உருக்கும் திட்டத்தை தி.மு.க அரசு தீவிரமாக செயல்படுத்த முயன்ற பொழுது, பல்வேறு ஹிந்து அமைப்புகள், மடாதிபதிகள், இந்து முன்னணி, பக்தர்கள், என பலர் தங்களின் கடும் எதிர்ப்பினை தெரிவித்து இருந்தனர். இதனை அடுத்து பா.ஜ.க மூத்த தலைவர்களில் ஒருவரும், செய்தி தொடர்பாளருமா அஸ்வத்தாமன் நீதிமன்றத்தை நாடி இருந்தார்.
அதனை தொடர்ந்து பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூரில் உள்ள புகழ் பெற்ற மலைக்கோவில் இடிக்கப்பட்டதற்கு தனது கடும் எதிர்ப்பினை தெரிவித்தது மட்டுமில்லாமல், நேரடியாக களத்திற்கே சென்று உண்மை சம்பவத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருந்தார் அஸ்வத்தாமன்.
இந்நிலையில் கடலூர் மாவட்டம் சிதம்பரம் கீழ வீதியில் உள்ள வீர ஆஞ்சநேயர் கோவில் மற்றும் தேர் நிலைக்கு எதிரில் இருக்கும், தான்தோன்றி விநாயகர் கோவிலை இடிக்க தி.மு.க அரசு முயன்றது. இதனை அடுத்து பா.ஜ.க செய்தி தொடர்பாளர் அஸ்வத்தாமன் மற்றும் பல்வேறு ஹிந்து அமைப்புகள் தங்கள் கடும் எதிர்ப்பினை தெரிவித்ததை, தொடர்ந்து தமிழக அரசு சமாதான முயற்சியில் ஈடுபட்டு கோவிலை இடிக்கும் முடிவினை தற்பொழுது தள்ளி வைத்து இருப்பது ஹிந்துக்களுக்கு கிடைத்த வெற்றி என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.