தமிழகத்தில் தாமரை பட்டி தொட்டி எல்லாம் மலர்ந்து விட்டது. திராவிடம் என்னும் அரை நூற்றாண்டு கால கிரகணம் தமிழகத்திலிருந்து மெல்ல மறையத் தொடங்கி இருக்கிறது. இது தமிழகத்தின் நல்வாழ்வுக்கான அறிகுறி. காணி நிலம் இருந்தால் இருப்பு வைத்து வாழ்பவன் கைப்பிடி மண்ணும் இல்லாவிட்டாலும்கூட ஒரு கையில் ஏரும் மறுகையில் மாடு பிடித்து தன் உழைப்பை நம்பி சொந்தக்காலில் கௌரவமாக வாழ்ந்தவர்கள் தமிழக மக்கள் .
தன் சுய உழைப்பில் பொருளீட்டி அதைக் கொண்டே தன் குடும்பத்தை காத்து உற்றார் உறவினர் கை தூக்கி விட்டு அதிலும் ஒரு பகுதியை கோவில் பள்ளி தான தர்மங்கள் புண்ணிய காரியங்கள் என்று கண்ணியமான ஒரு வாழ்க்கையை வாழ்ந்தவர்கள்.
பொங்கல் தீபாவளி தேர் திருவிழா என்று வருமேயானால் முகம் தெரியா மனிதர்களுக்குக் கூட அள்ளிக்கொடுத்து உபசரித்து ஊரே உறவாக கூடி வாழ்ந்த மக்களை மூன்று படி லட்சியம் ஒரு படி நிச்சயம் என்ற பசப்பு வார்த்தையில் மயக்கி திராவிடம் வீழ்த்தியது .அதைத்தொடர்ந்து இலவசம் மானியம் என்று இலவச வேட்டி சேலை என்று தொடங்கி ஆடு மாடு வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி மின்விசிறி கிரைண்டர் மிக்ஸி என்று நீண்டு போனது. ஓட்டுக்கு பணம் என்பதை கடந்து வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் மாதம்தோறும் பணம் என்ற அவல நிலைக்கு மக்களையும் அவர்களின் வாக்குரிமையையும் கொண்டு வந்தார்கள்.
ஈதல் இயல்பே ஏற்பது இகழ்ச்சி என்ற தத்துவத்தை வாழ்வியலாக வாழ்ந்து காட்டிய தமிழக மக்களை பொங்கல் இலவச பை மளிகைப் பொருட்கள் இலவசம் என்று கையேந்த வைத்து பிச்சைக்காரர்களாக்கி வேடிக்கை பார்த்தது திராவிடம். ஆலயங்கள் விழாக்கள் பாரம்பரிய குலதெய்வ வழிபாடு எல்லாம் நேரடியாக இழிவு படுத்தி மறைமுகமாக தடைசெய்ய இந்து அறநிலையத்துறை பெயரில் திட்டமிட்ட இந்து ஆன்மீக அழிப்பு நடந்து வருகிறது.
இங்கு பிரிவினையால் தேசத்தை கூறுபோட மத இன மொழி சமய பேதங்கள் திட்டமிட்டு வளர்க்கப்பட்டது.
மக்களை மடைமாற்றம் செய்து அந்நிய மதத்தில் புகுத்த முற்போக்கு பகுத்தறிவு என்ற பெயரில் திட்டமிட்ட இந்து இந்திய விரோதம் வளர்க்கப்பட்டது. இந்த சாதி மத மொழி இன பேதம் எல்லாம் இம் மக்களை ஆன்மீக குடையின் கீழ் ஒன்றுபடாமல் தடுத்து பகுத்தறிவு என்ற பெயரில் மடைமாற்றம் செய்து அந்நிய மதத்தில் புகுத்தி தேசத்தை துண்டாட நினைக்கும் அந்நிய சக்திகளின் உள்நாட்டு அரசியல் முகம் தான் திராவிடம் என்ற உண்மையை உணர்ந்து மக்கள் தேசிய பாதையில் சங்கமிக்கிறார்கள்.
தேசியவாதிகளின் விடாமுயற்சியும் சமூக ஊடகங்களில் எந்த பிரதிபலனும் எதிர்பாராது தொடர்ச்சியாக திராவிடத்தின் தீமைகளை எழுதி வந்ததன் பலனாக மக்கள் ஓரளவு உண்மையை உணரத் தொடங்கியதும் பலனே கடந்த சட்டமன்ற தேர்தலில் எந்த இலவசமும் மானியமும் வாக்குறுதியாக அளிக்காத பாஜகவிற்கு ஓட்டுக்கு பணம் வாங்காத மக்கள் தாமாக முன்வந்து வாக்களித்து ஒற்றை இலக்கத்தில் சட்டமன்ற உறுப்பினர்களை வாரி வழங்கினார்கள் . மக்களின் இந்த எழுச்சியை தேசாபிமானிகள் சமூக ஊடக போராட்டத்தை உணர்ந்துகொண்ட தமிழக பாஜகவின் தலைமை சரியான நேரத்தில் அதை சரியான பாதையில் திட்டமிட்டு முன்னெடுத்த தோடு உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டி என்ற துணிச்சலான முடிவையும் எடுத்து கட்சியின் அடிமட்ட தொண்டர்களுக்கு புது ரத்தம் பாய்ச்சியது
வெற்றி பெற்றால் எங்களால் வெற்றி பெற்றோம் என்று மார்தட்டும் தோல்வியுற்றால் பாஜக கூட்டணியில் தான் தோல்வியுற்ற என்று பழி சுமத்துவதும் தமிழகத்தில் திராவிட அரசியலில் கைவந்த கலையாக இருந்து வந்தது. கருணாநிதி பண்டாரம் பரதேசிகள் என்று கொச்சையாகப் பேசினார் எடப்பாடியும் பன்னீர் செல்வமும் அடிமைகளை வைத்து பேசவிட்டு வேடிக்கை பார்த்தார்கள் வித்தியாசம் அவ்வளவுதான் . இதையெல்லாம் கண்டு மனம் நொந்து இருந்த இந்துத்துவா ஆதரவாளர்களுக்கும் பாஜக நிர்வாகிகளுக்கும் தமிழக பாஜக தலைமையில் தனித்துப் போட்டி என்ற முடிவும் திரு அண்ணாமலை ஐபிஎஸ் அவர்களின் தமிழகத்தில் பாஜகவை எப்படியாவது வளர்த்தெடுக்க வேண்டும் என்ற அசுரத்தனமான உழைப்பு பெரும் நம்பிக்கையை மனதில் விதைத்தது .
அதன் விளைவாக வேட்பாளர் யார் என்று தெரியாது? யாருக்கு வாக்களிக்கிறோம் என்று கூட தெரியாது ஆனால் தாமரை என்ற ஒற்றை சின்னத்திற்கு நரேந்திர தாமோதர்தாஸ் மோடி அண்ணாமலை ஐபிஎஸ். என்ற இரண்டு ஆளுமைகளின் மீது கொண்ட அசைக்க முடியாத நம்பிக்கையில் இதுவரையில் களப்பணிக்கு வராதவர்கள் கூட இந்தத் தேர்தலில் வீதியில் இறங்கி களப்பணி செய்தார்கள்.எந்த மிரட்டலுக்கும் அஞ்சாது தொடர்ச்சியாக பாஜகவுக்கு ஆதரவாக சமூக ஊடகங்களிலும் மக்களிடமும் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வந்தார்கள் மோடி அரசின் நன்மைகளையும் திராவிடத்தின் தீமைகளையும் மட்டுமே பேசி ஆக்கபூர்வமான தேர்தல் அரசியலை செய்தார்கள்.
மக்களும் மெல்ல மெல்ல திராவிடத்தின் தீமையை உணர்ந்து பணம் பரிசு என்று ஒரு பக்கம் இருந்தாலும் தங்களின் வாக்கை சரியாக பயன்படுத்த வேண்டும் என்ற புரிதலில் பெரும்பாலான மக்கள் பாஜகவின் பக்கம் தங்கள் வாக்குரிமையை திருப்பி விட்டார்கள் அதன் விளைவு இன்று ஒத்த ஓட்டு பாஜக என்று ஏளனம் பேசியவர்கள் முன்பு நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் 308 இடங்களில் பாஜக வெற்றி பெற்றிருக்கிறது. இது வெறும் ஆரம்பமே இந்த வேகமும் விவேகமும் இப்படியே தொடரும் பட்சத்தில் அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம் முழுமையாக தேசியத்தில் இணைந்திருக்கும் . அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலில் ஆட்சிக்கு வருபவர் யார் என்பதை தீர்மானிக்கும் சக்தியாக பாஜக மாறியிருக்கும் .
தமிழக மக்களின் இந்த மனமாற்றத்தை உணர்ந்த தமிழக பாஜக தலைவர் திராவிட அதிகார கொள்ளையையும் வாக்கு வங்கி அரசியலுக்காக மத பயங்கரவாதத்தை ஆதரித்து வரும் திராவிட சதியையும் மக்கள் முன் ஆதாரபூர்வமாக அம்பலப்படுத்திவிட்டார். மறுபுறம் மோடி அரசின் 9 ஆண்டு கால நல்லாட்சியை அதன் மூலம் தமிழகம் பெற்ற நற்பலனை எல்லாம் தரவுகளோடு மக்கள் பார்வைக்கு கொண்டு போனார். அது படித்த மக்கள் மற்றும் மாணவர்கள் முதல் வாக்காளர் பெண்கள் என்று பல தரப்பிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
இந்த தாக்கத்தை அரசியல் வெற்றியாக மாற்றி அமைக்க மக்களோடு மக்களாக வலம் வரும் யாத்திரை யை தொடங்கி விட்டார். போகும் இடமெல்லாம் தமிழக மக்கள் தங்களின் குறை தீர்க்கும் கோனாக தமிழக பாஜக தலைவரை நம்பி சரணடைகிறார்கள். அவரும் ஒவ்வொரு தனிமனித வேண்டுதலையும் தீர்க்க அத்தனை பிரயத்தனமும் செய்கிறார். தமிழக மக்களின் மனமாற்றம் தேசிய வாதிகள் ஆன்மீக வாதிகள் கூட்டு முயற்சி தமிழக பாஜக தலைவரின் அதிரடி அரசியல் என்று எல்லாம் கை கூடி வரும் வேளையில் தேசிய பாஜக தலைமை அடித்து ஆட தயாராகி தமிழகத்தை திராவிட பிடியில் இருந்து விடுவித்து தேசியத்தில் இணைக்கும் பெரும் போருக்கு தயாராக தமிழக அரசியலை முற்றுகையிட்டு நிற்கிறது.
ஆம். எந்த வேலூர் சமஸ்தானத்தின் கோட்டையில் இருந்து கிறித்தவ வெள்ளையனின் அதிகார இறுமாப்பை வெள்ளையம்மாள் என்ற நல்லம்மாள் தொடங்கி வைத்தாளோ எந்த அறச் சீற்றம் வேலூரில் இருந்து பற்றி ராணி இலட்சுமி பாய் வடிவில் கங்கை கரையில் வெள்ளையனை நடுங்க வைத்ததோ அதே வேலூர் சமஸ்தானத்தின் மத்தியில் இருந்து அந்நிய முகமான திராவிடத்தை தமிழ் மண்ணில் இருந்து வேரோடு அகற்றும் வேள்வியை உள்துறை அமைச்சர் தேர்தல் பரப்புரை என்ற பெயரில் தொடங்கி வைத்தார். நம் மண்ணின் பாரம்பரிய அடி நாதம் உணர்ந்து அரசியல் களம் காணும் தேசிய பாஜக தங்களின் நம்பிக்கை நலன் விரும்பும் தமிழக பாஜக தலைவர் என்று இரண்டு கைகளிலும் தங்களின் மண் மக்கள் சார்ந்த அரசியல் மற்றும் தங்களின் சந்ததிகளை வழி நடத்தும் அதிகாரம் இரண்டையும் தர தயாராகிறது.
இந்த உண்மையை இங்குள்ள பாஜக இந்து அமைப்புகள் காட்டிலும் மிகவும் சரியாக உணர்ந்த. திராவிடம் தனது தோல்வியை ஏற்கவும் மனமில்லை. வெற்றிக்கும் வழியில்லை. இனி தங்களின் பிரிவினை அரசியலை அராஜக வன்முறை இந்து இந்திய விரோத பாணியில் என்று எப்படியும் முன்னெடுக்க முடியாது என்ற நிலையில் ஏதாவது ஒரு பெரும் குழப்பம் அசம்பாவிதம் விளைவித்தாவது தன்னை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும் என்று இறுதி ஆட்டத்திற்கு தயாராகிறது.
இனி தமிழக அரசியலில் பாஜக இல்லாது அரசியலும் இல்லை ஆட்சியும் இல்லை என்பதே நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் சொல்லும் எதார்த்த உண்மை. ஆனால் இந்த உண்மையை ஜீரணிக்கும் சக்தி திராவிடத்திற்கு அதன் கூட்டணி களுக்கும் நிச்சயம் இல்லை என்பதே கசப்பான உண்மை. எது எப்படி இருந்தாலும் வரும் நாட்களில் தமிழகம் வாழ தாமரை ஆளும் அதன் முன்னோட்டமாக இன்று தமிழகம் என்னும் ஆன்மீக திருக்குளத்தில் திரும்பிய பக்கமெல்லாம் தாமரை மொட்டவிழ்ந்து தேசியம் தெய்வீகம் என்ற மணம் வீச தொடங்கி விட்டது.