அண்ணாமலையின் ஊழல் பட்டியல்: தினகரன் திடீர் வலியுறுத்தல்!

அண்ணாமலையின் ஊழல் பட்டியல்: தினகரன் திடீர் வலியுறுத்தல்!

Share it if you like it

பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்ட ஊழல் பட்டியல் குறித்து தி.மு.க. அமைச்சர்கள் பேச வேண்டும் என டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார்

அமமுக பொதுச் செயலாளராக இருப்பவர் டிடிவி தினகரன். இவர், அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு நேற்றைய தினம் தஞ்சாவூரில் அம்பேத்கர் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதையடுத்து, பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது :

பா.ஜ.க. தமிழக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட ஊழல் பட்டியல், உண்மையா? இல்லையா? என்பது குறித்து அமைச்சர்கள் பதில் சொல்ல வேண்டும். மக்களவைத் தேர்தல் குறித்து நிகழாண்டு இறுதியில் முடிவு எடுக்கப்படும். திருச்சியில் ஓ.பன்னீர்செல்வம் நடத்தும் மாநாட்டுக்கு என்னை அழைப்பார்களா? என்று எனக்குத் தெரியாது என்று கூறினார்.


Share it if you like it