தமிழக பா.ஜ.க.வில் பெண்களுக்கு பாதுகாப்பு உள்ளது என பா.ஜ.க. மூத்த தலைவர் நடிகை குஷ்பு பத்திரிகையாளர்களிடம் கூறியுள்ளார்.
கோவை வெள்ளலூரில் பா.ஜ.க.வின் சார்பில் பொங்கல் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், பா.ஜ.க.வின் தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு கலந்து கொண்டார். விழாவின், நிறைவாக அவர் பேசும் போது இவ்வாறு கூறினார் ;
பொங்கல் விழா நம் கலாச்சாரம், பண்பாட்டை பிரதிபலிக்க கூடியது. தமிழக அரசு பொங்கல் பரிசாக, 1,000 ரூபாய் ஒரு கரும்பு கொடுப்பதற்கு வெட்கப்பட வேண்டும். கருணாநிதி இருக்கும் போது எத்தனை செய்தார் என நமக்கு தெரியும்.
‘தாங்கள் தான் தமிழ் கலாசாரத்தை பாதுகாப்பவர்கள்’ என கூறுவோர் இது போல செய்கின்றனர். தற்போது, பிரதமர் மோடி அனைத்து இடங்களிலும் தமிழ் பண்பாடு, கலாசாரம், மொழி குறித்து பேசுகிறார்.
தி.மு..க.வைச் சேர்ந்த ஒருவர் பெண்களுக்கு, ‘ஓசி’ பஸ் கொடுக்கிறோம் என்கிறார். இன்னொருவர் பெண்கள் குறித்து இழிவாக பேசுகிறார். பா.ஜ.க.வில் பெண்களுக்கு பாதுகாப்பு உள்ளது.
தமிழகம், தமிழ்நாடு, எல்லாமே தமிழ் மண்ணை சார்ந்தது. ஒன்றியம், மத்திய அரசு என உங்களுக்கு தகுந்தாற்போல் பேசுகிறீர். அப்படி இருக்கும்போது கவர்னர் கூறுதில் என்ன தவறு?
கமல் ஒரு கட்சியின் தலைவர். அவர் ஒரு முடிவெடுத்து ராகுலுக்கு ஆதரவு கொடுப்பது அவரது இஷ்டம். ஆதரவு கொடுக்க கூடாது என நாங்கள் கூற முடியாது. தற்போது நன்கு படித்த, சட்டம் தெரிந்த தலைவர் ஒருவர் துணிச்சலாக, தெளிவாக பேசுவது கண்டிப்பாக பிரச்சனையை ஏற்படுத்தும்.
நாம் இருக்கும் இடத்தை பொறுத்தே நாம் கூறும் வார்த்தையும் மாறும். தமிழகம், தமிழ்நாடு எதுவாக இருந்தாலும் அது இந்தியாவின் மிகப்பெரிய அங்கமாகும் என குறிப்பிட்டுள்ளார்.