மகா பெரியவாவும், பெரியாரும் ஒண்ணா? சுகி சிவத்துக்கு பா.ஜ.க. பெண் நிர்வாகி எச்சரிக்கை!

மகா பெரியவாவும், பெரியாரும் ஒண்ணா? சுகி சிவத்துக்கு பா.ஜ.க. பெண் நிர்வாகி எச்சரிக்கை!

Share it if you like it

வாழ்நாள் துறவறம் பூண்ட மகா பெரியவா எங்கே, 75 வயதில் திருமணம் செய்த ஈரோடு ராமசாமி எங்கே? இருவரையும் எப்படி ஒப்பிட்டுப் பேசலாம். சொற்பொழிவில் இப்படி பேசினால் உங்களுக்கு மரியாதை கிடையாது என்று சுகி சிவத்துக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறார் பா.ஜ.க. பெண் நிர்வாகி ஒருவர்.

சென்னையைச் சேர்ந்தவர் சுமதி மேகவர்ணம். பா.ஜ.க. நிர்வாகியான இவர், அவ்வப்போது அரசியல் தொடர்பான வீடியோ பேசி வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த வகையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு சுகி சிவத்துக்கு எச்சரிக்கை விடுத்து வீடியோ வெளியிட்டிருக்கிறார். அதாவது, ஒரு நிகழ்ச்சியில் பேசிய சுகி சிவம், மகா பெரியவாவுடன், ஈரோடு வெ.ராமசாமியை ஒப்பிட்டு பேசியிருந்தார். இந்த வீடியோவை திராவிடர் கழகத்தினரும், திராவிட விடுதலைக் கழகத்தினரும் மற்றும் தி.மு.க. உள்ளிட்ட திராவிட சிந்தனை உள்ளவர்களும், பெரியாரிஸ்ட்களும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வைரலாக்கி வந்தனர்.

இதையடுத்து, சுகி சிவத்துக்கு எச்சரிக்கை விடுத்து வீடியோ வெளியிட்டிருக்கிறார் பா.ஜ.க. நிர்வாகி சுமதி மேகவர்ணம். அந்த வீடியோவில்தான் வாழ்நாள் முழுவதும் துறவறம் பூண்டு வாழ்க்கை நடத்திய மகா பெரியவாவுடன், தனது சொத்து பறிபோய் விடக்கூடாது என்பதற்காக 75 வயதில் திருமணம் செய்த ஈரோடு வெ.ராமசாமியுடன் ஒப்பிட்டுப் பேசுவா என்று கேள்வி எழுப்பி இருக்கிறார். மேலும், தனது சொத்துக்களை மக்களுக்காக எழுதி வைத்தவர் முத்துராமலிங்கத் தேவர். அவருடன் ஒப்பிடும்போது ஈரோடு ராமசாமி தூசுக்கு சமம். மேலும், அவர் ஜாதியை ஒழித்தார் என்று சொல்வதும் பொய் என வெளுத்து வாங்கி இருக்கிறார்.

இந்த வீடியோ தற்போது ஹிந்து மத பற்றாளர்களால் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கப்பட்டு வருகிறது. சுமதி மேகவர்ணம் மேலும் என்னவெல்லாம் பேசினார் என்பதை தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டிருக்கும் வீடியோவை பாருங்கள்…


Share it if you like it