தி.மு.க ஆட்சிக்கு வந்த பின்பு தி.மு.க நிர்வாகிகள் அக்கட்சியை சேர்ந்த அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்களின் அராஜக போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இச்சூழ்நிலையில் கடலூர் தி.மு.க எம்.பி ரமேஷ் அவர்களது ஆலையில் பண்ருட்டி மேல்மாம்பட்டு கிராமத்தை சேர்ந்த ஏழை தொழிலாளி கோவிந்தராஜ் அவர்கள் கூலி உயர்வு கேட்டதற்காக மர்மமான முறையில் தாக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.
இது குறித்து எல்லாம் வாய் திறக்காமல் தமிழக மு.க பணியாளர்கள் குஜராத், உ.பி., என்று பா.ஜ.க ஆளும் மாநிலங்கள் பக்கம் மக்களின் கவனத்தை திசை திருப்பும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டது என்பதை யாரும் மறந்திருக்க முடியாது. ஆனால் கடலூர் சம்பவத்தை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு கள நிலவரத்தை நாட்டு மக்களுக்கு எடுத்து கூறிய கட்சி பா.ஜ.க என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. பா.ஜ.க நடத்திய தொடர் சட்ட போராட்டத்திற்கு பிறகு இன்று தி.மு.க எம்.பி நீதிமன்றத்தில் சரண் அடைந்து இருப்பது பா.ஜ.க-விற்கு கிடைத்த வெற்றி என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.