தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அண்ணாமலை மிக கடுமையாக விமர்சனம் செய்த காணொளி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழகத்தில் பா.ஜ.க வேகமாக வளர்ந்து வருவதை பொறுத்துக் கொள்ள முடியாமல், தி.மு.க, வி.சி.க, கம்யூனிஸ்ட் தோழர்கள், உட்பட பலர் பாரதப் பிரதமர் மோடியையும், அண்ணாமலையையும், மிக கடுமையாக இன்று வரை விமர்சனம் செய்து வருகின்றனர். சமீபத்தில் பா.ஜ.க திருப்பூரில் புதிய அலுவகம் ஒன்றினை கட்டியது. இதனை பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா திறந்து வைத்தார் மேலும் 4 புதிய அலுவகத்தை காணொளி வாயிலாக திறந்து வைத்து இருந்தார்.
இதனை பொறுத்துக் கொள்ள முடியாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு பதிவு செய்து இருந்தார்.
கட்சி எழும்புகிறதோ இல்லையோ, கட்டிடங்கள் எழும்புகின்றன! நான்கு நகரங்களில் மாவட்டக் கட்சி்யின் புதிய, பெருமதிப்புள்ள அலுவலகக் கட்டிடங்களை ஒரே நாளில் திறக்கும் கட்சிக்குப் பாராட்டுக்கள்.
இதற்கு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தக்க பதிலடியை சிதம்பரத்திற்கு கொடுத்து இருந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் மற்றொரு மூத்த தலைவரும் தமிழகம் நன்கு அறிந்த பிரபல ஆபாச பேச்சாளருமான இ.வி.கே.எஸ் இளங்கோவன் அவர்கள் பா.ஜ.க தலைவரை மிகவும் கீழ்த்தரமாக விமர்சனம் செய்து பேசியதற்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.