ஆடு திருடர்களை பிடிக்க சென்ற எஸ்ஐ வெட்டிக் கொலை.
தி.மு.க ஆட்சி அமைந்த நாளில் இருந்தே சட்டம், ஒழுங்கு, நாளுக்கு நாள் மோசமாகி கொண்டே செல்வதற்கு மற்றொரு சாட்சி இது குறித்து தமிழ.க பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
பா.ஜ.க தலைவரின் டுவிட்டர் பதிவு.
திருச்சி மாவட்டம் நவல்பட்டு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கயவர்களால் நேற்று இரவு வெட்டிக் கொல்லப்பட்டார் என்கின்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது! கரணம் தப்பினால் மரணம் என்கிற நிலைப்பாட்டில் தான் நம்முடைய காவல்துறை சகோதர சகோதரிகள் பணியாற்றுகிறார்கள்.
பணி நேரத்தில் கொல்லப்பட்டவர்களுக்கு சிறப்பு சட்டம் எதுவும் கிடையாது, இது போன்ற நிகழ்வுகள் அந்த சிறப்பு சட்டம் வேகமாக வர வேண்டும் என்று நமக்கு நினைவூட்டுகிறது. மாநில அரசு கூட இதுபோன்ற நிகழ்வுகளுக்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணத் தொகையை அறிவித்து அதை செயல்படுத்த வேண்டும். அன்னாரது குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்!
தமிழகத்தில் காவலர்களுக்கே போதிய பாதுகாப்பு இல்லை என்றால் பொதுமக்களின் நிலை எவ்வாறு இருக்கும் என பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.