லாவண்யா வழக்கில் சி.பி.ஐ. விசாரணை தொடக்கம்!பா.ஜ.க.வுக்கு கிடைத்த வெற்றி!

லாவண்யா வழக்கில் சி.பி.ஐ. விசாரணை தொடக்கம்!பா.ஜ.க.வுக்கு கிடைத்த வெற்றி!

Share it if you like it

மதம் மாற மறுத்து மாணவி லாவண்யா தற்கொலை செய்துகொண்ட வழக்கில், இன்று சி.பி.ஐ. விசாரணை தொடங்கியது. இது பா.ஜ.க.வுக்கு கிடைத்த வெற்றி என்பதுதான் ஹைலைட்!

அரியலூர் மாவட்டம் வடுகபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகானந்தம் மகள் லாவண்யா. தஞ்சாவூர் மாவட்டம் மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைப் பள்ளியின் விடுதியில் தங்கி பிளஸ் 2 படித்து வந்தார். இவர், திடீரென ஜனவரி மாதம் 9-ம் தேதி பூச்சிமருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இவரது தற்கொலைக்கு பள்ளி நிர்வாகத்தின் மத மாற்ற டார்ச்சர்தான் காரணம் என்று கூறப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக மாநில போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது, லாவண்யாவை மதம் மாற நிர்பந்தித்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை என்று தஞ்சாவூர் எஸ்.பி. ரவளி பிரியா தெரிவித்தார்.

அதேசமயம், லாவண்யாவின் மரணத்துக்கு நீதி கேட்டு பா.ஜ.க., விஷ்வ ஹிந்து பரிஷத், இந்து முன்னணி உள்ளிட்ட ஹிந்து அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன. குறிப்பாக, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் இளைஞர் பிரிவான அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் (ஏ.வி.பி.வி.) அமைப்பினர் நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, சென்னை வள்ளுவர் கோட்டத்தில், தனது கட்சி தொண்டர்களுடன் உண்ணாவிரதத்தை மேற்கொண்டார்.

இதனிடையே, மாநில போலீஸாரின் விசாரணையில் நம்பிக்கை இல்லாத முருகானந்தம், சி.பி.சி.ஐ.டி. விசாரணை கோரி, மதுரை ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிமன்றம், சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது. இதை எதிர்த்து தி.மு.க. தலைமையிலான தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. ஆனால், மதுரை ஐகோர்ட் உத்தரவின்படி, லாவண்யா வழக்கில் சி.பி.ஐ. விசாரணையே தொடரும் என்று உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட், மதம் மாற்ற புகார் தொடர்பாகவும் சி.பி.ஐ. விசாரணை தேவை என்று வலியுறுத்தியது.

இதைத் தொடர்ந்து, லாவண்யா வழக்கு தொடர்பான ஆவணங்களை மாநில போலீஸாரிடமிருந்து பெற்ற சி.பி.ஐ., பிப்ரவரி 21-ம் தேதி முதல் விசாரணையை தொடங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தது. அதன்படி, இன்று தனது விசாரணையை தொடங்கியது சி.பி.ஐ. முதல்கட்டமாக, உ.யிரிழந்த மாணவி லாவண்யாவின் பெற்றோரிடம் விசாரணை நடத்திய சி.பி.ஐ., தொடர்ந்து மைக்கேல்பட்டி பள்ளி நிர்வாகத்திடமும், விடுதி நிர்வாகத்திடமும் விசாரணை நடத்தி இருக்கிறது. இதுதான் பா.ஜ.க. உள்ளிட்ட ஹிந்து அமைப்புகளுக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கப்படுகிறது.

இது ஒருபுறம் இருக்க, சி.பி.ஐ. விசாரணைக்கு தடை கோரி, தி.மு.க. தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டதால், லாவண்யா தற்கொலை விவகாரத்தில் அக்கட்சியினருக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் பொதுமக்களுக்கு இருக்கிறது. ஆகவே, மைக்கேல்பட்டி பள்ளி அமைந்திருக்கும் திருவையாறு தொகுதியின் எம்.எல்.ஏ.வான தி.மு.க.வைச் சேர்ந்த துரை.சந்திரசேகரனிடமும் சி.பி.ஐ. விசாரணை நடத் வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

Image

Share it if you like it