பா.ஜ.க.வில் இணையும் நடிகர் சூர்யாவின் உறவினர்?

பா.ஜ.க.வில் இணையும் நடிகர் சூர்யாவின் உறவினர்?

Share it if you like it

பிரபல நடிகை ஜோதிகாவின் அக்கா நக்மா பா.ஜ.க.வில் இணைய போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்தவர் நக்மா. இவர், பிரபல தமிழ் திரைப்பட நடிகை ஜோதிகாவின் சொந்த அக்கா ஆவார். திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புகள் குறைந்த காரணத்தினால், தன்னை காங்கிரஸ் கட்சியில் இணைத்துக் கொண்டார். அந்தவகையில், கடந்த 2014-ல் நடந்த லோக்சபா தேர்தலில், உத்தர பிரதேச மாநிலம் மீரட் தொகுதியில் போட்டியிடுவதற்கு காங்கிரஸ் கட்சி இவருக்கு வாய்ப்பு வழங்கியது. ஆனால், மோடி அலையின் காரணமாக இவர் நான்காவது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

இதனை தொடர்ந்து, அகில இந்திய காங்கிரஸ் மகளிர் அணி பொதுச் செயலராக இவர் 2015- ல் நியமனம் செய்ப்பட்டார். இந்நிலையில், வரும் 10-ம் தேதி நடக்கவுள்ள ராஜ்யசபா தேர்தலில், காங்கிரஸ் மேலிடம் தனக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கும் என மிகுந்த நம்பிக்கையுடன் இருந்துள்ளார். ஆனால், வேட்பாளர் பட்டியலில் நக்மா பெயர் இடம் பெறவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், கடும் கோவம் அடைந்த அவர் தனது கட்சித் தலைமைக்கு எதிராக தொடர்ந்து கருத்துக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வந்தார். கட்சிக்காக உழைக்கும் தமக்கு வாய்ப்பு தரப்படவில்லை என தனது வேதனையை வெளிப்படுத்தி இருந்தார். அந்தவகையில், காங்கிரஸ் கட்சிக்கு குட் பை சொல்லி விட்டு பா.ஜ.க.வில் சேர தீவிரமாக யோசித்து வருவதாக தற்பொழுது தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it