மாற விரும்பவில்லை… மாற்ற விரும்புகிறேன்: அண்ணாமலை நச்!

மாற விரும்பவில்லை… மாற்ற விரும்புகிறேன்: அண்ணாமலை நச்!

Share it if you like it

நான் என்னை மாற்றிக் கொள்ள விரும்பவில்லை. அரசியலை நேர்மையானதாக மாற்ற விரும்புகிறேன் என்று அண்ணாமலை கறாராகக் கூறியிருக்கிறார்.

தமிழக பா.ஜ.க. தலைவராக இருக்கும் அண்ணாமலை, கடந்த இரு தினங்களுக்கு முன்பு நடந்த நிர்வாகிகள் மற்றும் அணித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். அப்போது, அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தால், தலைவர் பதவியிலிருந்து விலகி விடுவேன் என்று அவர் பேசியதாக தகவல்கள் வெளியாகின. இதற்கு, பா.ஜ.க.வில் இருக்கும் முக்கிய தலைவர்கள் சிலர் முரண்பட்ட கருத்துக்களை தெரிவித்ததாகவும் செய்திகள் பரவின. அதேசமயம், அண்ணாமலை எந்தக் கட்சியையும் குறிப்பிட்டுக் கூறவில்லை. பொதுவாக, எந்தக் கட்சிகளுடனும் கூட்டணி வேண்டாம். தனித்து செயல்பட்டால்தான் நாம் வளர முடியும் என்று பேசியதாக சிலர் கூறினர்.

இந்த நிலையில், இன்று அண்ணாமலை அளித்த பேட்டியில் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தி இருக்கிறார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, நான் என்னை மாற்றிக் கொள்ள விரும்பவில்லை. அரசியல்தான் மாற வேண்டும். நேர்மையான அரசியல் வேண்டும் என்று விரும்புகிறேன். அதற்கு அச்சாரமாக 2024 தேர்தலை பார்க்கிறேன் என்று கூறியிருக்கிறார். இந்த காணொளிதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அண்ணாமலை இன்னும் என்னவெல்லாம் சொன்னார் என்பதை தெரிந்துகொள்ள கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்..


Share it if you like it