மூன்று முதல்வர் கட்சியை கண்டித்து பா.ஜ.க நாளை போராட்டம்..!

மூன்று முதல்வர் கட்சியை கண்டித்து பா.ஜ.க நாளை போராட்டம்..!

Share it if you like it

தி.மு.க ஆட்சிக்கு வந்தால் 100 நாட்களில் அனைத்து பிரச்சனைகளும் தீர்க்கப்படும் என்று மக்களுக்கு வாக்குறுதி வழங்கியது. ஆனால் ஆட்சிக்கு வந்து 75 நாட்களுக்கு மேல் ஆகியும் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் இன்று வரை திணறி வருகிறது.

  • நீட் தேர்வு ரத்து.
  • மகளிருக்கு 1,000 ரூபாய்.
  • பெட்ரோல், டீசல், விலை குறைப்பு.
  • கல்வி கட்டணம் ரத்து.

என்று மக்களுக்கு கொடுத்த இன்னும் பல வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் மக்களின் கவனத்தை திசை திருப்பும் முயற்சியிலேயே அதிக கவனத்தை செலுத்தி வருகிறது விடியல் அரசு.

இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில், பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பத்திரிக்கையாளர்களை சந்தித்த பொழுது அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார்.

”பெட்ரோல், டீசல் விலையை குறைக்க, மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. ”தி.மு.க.,வினர், மீனவர்களுக்கு எதிராக எடுக்கும் செயல்பாடுகளை கண்டித்து பா.ஜ.க, மீனவர் அணி சார்பில், நாளை போராட்டம் நடத்தும் எனவும்.

ஆகஸ்ட் மாதம், டெல்டா மாவட்டங்களில் போராட்டம் நடத்த உள்ளோம். பெட்ரோல், டீசலை, ஜி.எஸ்.டி., வரி வரம்புக்குள் கொண்டு வர, மத்திய அரசு தயார் என்று அவர் தெரிவித்துள்ளார்.


Share it if you like it