திராவிட கும்பலின் பிராமண வெறுப்பு அரசியல்… தில்லாக போட்டு உடைத்த பா.ஜ.க. அண்ணாமலை!

திராவிட கும்பலின் பிராமண வெறுப்பு அரசியல்… தில்லாக போட்டு உடைத்த பா.ஜ.க. அண்ணாமலை!

Share it if you like it

திராவிட கும்பலின் பிராமண வெறுப்பு அரசியல் குறித்து தில்லாக பேசி இருக்கிறார் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை.

சென்னை மயிலாப்பூரில் பா.ஜ.க. சமூக வலைதள ஆதரவாளர்களின் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தி்ல் பேசிய அண்ணாமலை, “தமிழக வரலாற்றிலேயே முதன்முறையாக 21 ஆதீனங்கள் தமிழகத்தை விட்டு வெளியே சென்றிருக்கிறார்கள். இது ஒரு சரித்திர நிகழ்வாகும். இதைக் கண்டு வயிற்றெரிச்சல் அடைந்த வடமாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் ஒருவர், தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசும்போது, அனைவரும் பிராமணர்கள் என்று கூறியிருக்கிறார்.

சரி, பிராமணர்கள் என்றால் என்ன பிரச்னை? அவர்கள் என்ன தவறு செய்தார்கள்? நாசிக்கள் எந்தளவுக்கு யூதர்களை வெறுத்தார்களோ, அந்தளவுக்கு திராவிட கும்பல் பிராமண வெறுப்பைக் கடைப்பிடித்து வருகிறது. இதை நான் ஏ.என்.ஐ. பேட்டியிலேயே தைரியமாகக் கூறியிருக்கிறேன். இதை சொல்ல எனக்கு துளியும் பயம் கிடையாது. பிராமணர்களை தேடித்தேடி வேட்டையாடினீர்கள், மிரட்டினீர்கள், அவர்களை வெளியேற்ற முயற்சி செய்தீர்கள்.

எத்தனையோ பேர் கடவுள் மீது பக்தியுடனும் மரியாதையுடனும் இருக்கிறார்கள். எத்தனையோ பேர் தங்களது வேலையைப் பார்த்துக்கொண்டு ஒழுக்கமாக இருக்கிறார்கள். எத்தனையோ பேர் நல்லவர்கள் இருக்கிறார்கள். பிராமணர்களை வைத்து இங்கு ஒரு மிகப்பெரிய அரசியலே நடந்துகொண்டிருக்கிறது. இவை அனைத்தையும் உடைத்து நொறுக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது” என்று கூறியிருக்கிறார். இக்காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Share it if you like it