பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி நட்டா சூளுரை.
திருப்பூரில் இருந்து பல்லடம் செல்லும் சாலையில் தமிழக பாஜக புதிய அலுவலகம் ஒன்றினை கட்டியுள்ளது. இக்கட்டிடத்தை பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி. நட்டா இன்று திறந்து வைத்தார். முன்னதாக பாஜக மாநில செயற்குழு கூட்டம் பல்லடம் சாலையில் இருக்கும் லட்சுமி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமை வகித்தார். மேலும், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், எம்.எல்.ஏக்கள் வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன் மற்றும் மூத்த நிர்வாகிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
அதனை தொடர்ந்து பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி நட்டா இவ்வாறு பேசினார்.
“காங்கிரஸ் கட்சி குடும்ப கட்சியாக மாறியிருக்கிறது. பாஜக மட்டும் தான் தற்போது ஜனநாயகத்தோடு இருக்கிறது.
குடும்ப அரசியல் ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை கொடுக்கிறது. அது மக்களுக்கு நல்லதல்ல. இந்தியாவில் குடும்ப அரசியல் இல்லாத கட்சியாக பாஜக மட்டுமே திகழ்கிறது. மக்களுக்கான வளர்ச்சித் திட்டங்களில் பிரதமர் மோடி கவனம் செலுத்துகிறார். தமிழ்நாட்டின் பண்டிகையையும், கலாசாரத்தையும், திமுக அரசு மாற்ற முயற்சிக்கிறது. இருந்த போதிலும், 4 எம்.எல்.ஏக்களை 40 ஆக்கும் முயற்சியில் தீவிரம் காட்ட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டு உள்ளார்.