உதயநிதிக்கு என்ன தகுதி இருக்கிறது என்பதற்காக, மாநில இளைஞர் அணிச் செயலாளர் பதவியும், அமைச்சர் பதவியும் கொடுத்திருக்கிறார்கள் என்று பா.ஜ.க. நிர்வாகி கேள்வி எழுப்பி இருக்கிறார்.
பா.ஜ.க. இளைஞர் அணி மாநிலத் தலைவராக இருப்பவர் ரமேஷ் சிவா. இவர், தனியார் யூடியூப் சேனலுக்கு நேற்று அளித்த பேட்டியில், “நான் பா.ஜ.க.வில் இணைந்து 12 வருடங்களாகிறது. கட்சிக்காக இத்தனை ஆண்டுகாலம் உழைத்ததால் எனக்கு மாநில இளைஞர் அணித் தலைவர் பதவி கொடுத்திருக்கிறார்கள். ஆனால், உதயநிதி ஸ்டாலின் கட்சியில் சேர்ந்து எத்தனை ஆண்டுகள் ஆகிறது. எப்படி அவருக்கு அமைச்சர் பதவியும், மாநில இளைஞர் அணிச் செயலாளர் பதவியும் கொடுத்தார்கள். முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேரன் மற்றும் இன்னாள் முதல்வர் ஸ்டாலினின் மகன் என்பதைத் தவிர உதயநிதிக்கு என்ன தகுதி இருக்கிறது” என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.
இந்த வீடியோதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ரமேஷ் சிவா வேறு என்னவெல்லாம் சொல்லி இருக்கிறார் என்பதை தெரிந்துகொள்ள கீழே உள்ள வீடியோவை பாருங்கள்…