தயவு செய்து எனது படத்தை புறக்கணிக்காதீர்கள்: ஹிந்துக்களிடம் கெஞ்சும் அமீர்கான்!

தயவு செய்து எனது படத்தை புறக்கணிக்காதீர்கள்: ஹிந்துக்களிடம் கெஞ்சும் அமீர்கான்!

Share it if you like it

நானும் நாட்டை நேசிப்பவன்தான். ஆகவே, தயது செய்து எனது படத்தை புறக்கணிக்க வேண்டாம் என்று பாலிவுட் நடிகர் அமீர்கான் ஹிந்துக்களிடம் கெஞ்சி கேட்டுக் கொண்டிருக்கிறார்.

பாலிவுட் திரையுலகைப் பொறுத்தவரை, முன்னணி ஹீரோக்களாக இருப்பவர்களில் பெரும்பாலானோர் முஸ்லீம்கள்தான். உதாரணமாக, சல்மான்கான், அமீர்கான், ஷாருக்கான் என அடுக்கிக் கொண்டே போகலாம். இதனால், பாலிவுட் திரைப்படங்களில் ஹிந்து சாமியார்கள், மந்திரவாதிகள் ஆகியோரை வில்லனாக சித்தரித்தே கதைக்களம் அமைக்கப்பட்டிருக்கும். இப்படி ஹிந்து சாமியார்களை வில்லன்களாக சித்தரிப்பதால், பாலிவுட் படங்களை ஹிந்துக்கள் புறக்கணித்து வருகின்றனர். எனவே, இப்படிப்பட்ட ஹிந்தி படங்கள் வெளியாகும் போதெல்லாம் ‘பாய்காட் பாலிவுட்’ என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்வது வழக்கம்.

குறிப்பாக, அமீர்கான் மீது ஹிந்துக்களுக்கு மிகவும் கடுமையான அதிருப்தி உண்டு. காரணம், குஜராத் கலவரம் தொடர்பாக பேசிய அமீர்கான், குஜராத்தில் கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் மீது அத்துமீறல்கள் நடக்கிறது. இதற்கெல்லாம் ஆளும் பா.ஜ.க. அரசும், மோடியும்தான் காரணம். இதற்கான விலையை அவர்கள் கொடுக்க வேண்டும் என்று கடுமையான வார்த்தைகளால் விமர்சித்தார். மேலும், 2015-ம் ஆண்டு அமீர்கான் அளித்த பேட்டி ஒன்றில், இந்தியாவில் சகிப்பின்மை அதிகரித்து வருகிறது என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதுவும் ஹிந்துக்கள் மத்தியில் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இதன் காரணமாக, அமீர்கான் படம் வெளியாகும்போதும் ‘பாய்காட் பாலிவுட்’ மற்றும் அமீர்கான் படத்தின் தலைப்பை போட்டு ‘பாய்காட்’ என்று ட்ரெண்டிங் செய்து வருகின்றனர். இந்த சூழலில், அமீர்கான் நடிப்பில் ‘லால் சிங் சத்தா’ என்கிற படம் ஆகஸ்ட் 11-ம் தேதி ரிலீஸாக உள்ளது. 1994-ம் ஆண்டு வெளியான ‘ஃபாரெஸ்ட் கேம்ப்’ என்கிற ஹாலிவுட் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் இப்படம். இப்படத்தில், அமீர்கானுடன் இணைந்து, கரீனா கபூர் கான், மோனா சிங் மற்றும் நாக சைதன்யா ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். ஆகவே, அமீர்கானுக்கு எதிராக மீண்டும் ‘பாய்காட் பாலிவுட்’, ‘பாய்காட் அமீர்கான்’ மற்றும் ‘பாய்காட் லால் சிங் சத்தா’ என்ற ஹேஷ்டேக்கை டிரெண்டிங் செய்து வருகின்றனர்.

இதுதான் அமீர்கானை அச்சத்தில் ஆழ்த்தி இருக்கிறது. படம் ஃபெயிலியர் ஆகிவிட்டால் பாலிவுட்டில் தனது செல்வாக்கு சரிந்து விடும் என்று பயப்படுகிறார். எனவேதான், நானும் தேசத்தை நேசிப்பவன்தான். ஆகவே, எனது படத்தை புறக்கணிக்க வேண்டாம் என்று கெஞ்சாத குறையாக ஹிந்துக்களிடம் மண்டியிட்டிருக்கிறார். அதாவது, மேற்படி டிரெண்டிங் ஹேஷ்டேக்குகள் லால் சிங் சத்தா படத்தையும், அமீர்கானின் செல்வாக்கையும் பாதிக்குமா என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த அமீர்கான், “பாய்காட் பாலிவுட், பாய்காட் அமீர்கான், பாய்காட் லால் சிங் சத்தா போன்ற ஹேஷ்டேக்குகள் மிகுந்த வருத்தமளிக்கின்றன. இதை மனதிற்குள் சொல்லிக் கொண்டிருக்கும் பலர், நான் இந்தியாவை விரும்பாத ஒருவர் என்று நம்புகிறார்கள். இதை நினைத்து நான் வருத்தப்படுகிறேன். அது முற்றிலும் பொய்யானது. நான் நாட்டை மிகவும் நேசிக்கிறேன். சிலர் அப்படி உணர்ந்தால் அது துரதிர்ஷ்டவசமானது. அவர்கள் நினைப்பது உண்மையல்ல என்பதை அனைவருக்கும் தெளிவுப்படுத்தி, நான் இந்தியாவை நேசிப்பவன் என்று தெரியப்படுத்த விரும்புகிறேன். எனவே, தயவுசெய்து எனது படங்களைப் புறக்கணிக்காதீர்கள். தயவு செய்து என் படங்களைப் பாருங்கள்” என்று ஹிந்துக்களிடம் கெஞ்சி கேட்டுக் கொண்டிருக்கிறார்.


Share it if you like it