புர்கா விவகாரம்: குஷ்பு என்ன சொல்கிறார்?!

புர்கா விவகாரம்: குஷ்பு என்ன சொல்கிறார்?!

Share it if you like it

ஹிஜாப், பர்தா, புர்கா தொடர்பாக பிரபல நடிகை குஷ்பு தெரிவித்திருக்கும் கருத்து பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.

பிரபல நடிகையான குஷ்பு, பா.ஜ.க.வில் செயற்குழு உறுப்பினராக இருக்கிறார். இஸ்லாமிய குடும்பத்தைச் சேர்ந்த இவர்தான், புர்கா தொடர்பாக தனது கருத்தை பதிவு செய்திருக்கிறார். அதாவது, கர்நாடக மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப், பர்தா, புர்கா அணிந்து வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இதற்கு ஹிந்து மாணவ, மாணவிகள் எதிர்ப்புத் தெரிவித்து காவித் துண்டு அணிந்து வந்ததால், பிரச்னை வெடித்தது. இதையடுத்து, ஹிகாப், பர்தா, புர்கா அணிய தடை விதித்தது கர்நாடக மாநில அரசு.

இந்த விவகாரம்தான் தற்போது விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. ஹிகாப், பர்தா, புர்கா தடைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இஸ்லாமிய மாணவிகள் மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். இதனால், பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அறிவித்திருக்கிறது மாநில அரசு. மேலும், புர்கா விவகாரம் அம்மாநில ஐகோர்ட்டிலும் விசாரணையில் இருக்கிறது.

இந்த நிலையில்தான், இஸ்லாமிய பெண்மணியும், பிரபல நடிகையும், பா.ஜ.க. செயற்குழு உறுப்பினருமான குஷ்பு, கல்வி என்பது மதம் சார்ந்தது அல்ல, சமத்துவம் சார்ந்தது. பள்ளியில் சீருடை அணிவதையே நான் நம்புகிறேன். விதிகள் அனைவருக்கும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள் என்பது உங்கள் மதத்தைக் காட்டுவதற்காக அல்ல, ஒரு இந்தியராக உங்கள் பலத்தைக் காட்டுவதற்காகவே. இந்த விஷயத்தில் அரசியலில் ஈடுபடுவது அவமானம். உங்கள் மதத்தை உங்கள் பேட்ஜ்ஜாக பள்ளிக்கு அணிய வேண்டும் என்ற இந்த திடீர் தூண்டுதல் ஏன்? பள்ளிகளுக்கு விதிகள் இல்லையா?’ என்று காட்டமாக தனது கருத்தை தெரிவித்திருக்கிறார்.

ஏற்கெனவே, கேரள மாநில ஐகோர்ட்டும் இதே கருத்தை கூறியிருக்கும் நிலையில், தற்போது குஷ்புவும் அதை அமோதிக்கும் வகையில் பேசிருப்பது பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றிருக்கிறது.


Share it if you like it