கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து பொதுத்துறை மற்றும் தனியார் வங்கி இணைந்து, பிரதம மந்திரியின் பல்வேறு கடன் திட்டங்களின் கீழ் 3,749 கோடி ரூபாய் கடன் வழங்கும் விழா கோவை கொடிசியா வளாகத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்னிலையில் நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் பல எம்எல்ஏக்களும் அரசு அதிகாரிகள் வங்கி அதிகாரிகளும் பங்கேற்றனர். இந்நிலையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசிகொண்டிருக்கும்போது மத்திய அரசு வசூலிக்கும் செஸ் வரியை மத்திய அரசே வைத்துக்கொள்வதில்லை என்று பேச, கூட்டத்தில் நின்றுகொண்டிருந்த சதீஷ் என்ற நபர் தன் கையை உயர்த்தி நிர்மலா சீதாராமனிடம் ஒரு குற்றசாட்டை வைத்தார். அதில் தான் கிராஸ் கட் சாலையில் தொழில் செய்து வருவதாகவும் தொழில் கடன் கேட்டு தான் கணக்கு வைத்திருக்கும் பாங்க் ஆப் பரோடா வங்கிக்கு பலமுறை அலைந்து திரிவதாகவும் இதுவரை கடன் வழங்கவில்லை என்று தெரிவித்தார்.இதற்கு மத்திய நிதியமைச்சர் வங்கி அதிகாரிகளிடம் விசாரித்து அனைத்து ஆவணங்களும் சரியாக இருந்தால் கடன் வழங்கப்படும் என்று கூறினார்.
இந்நிலையில் டால்க் டெல் லைப் என்ற பெயரில் சதிஷ் தனது மனைவி சுபஸ்ரீ மற்றும் தனது மக்கள் ஸ்மிரிதி ஆகியோரை பார்ட்னராக கொண்டு தொழில் நிறுவனம் நடத்தி வருவதாகவும் தனது மனைவி கிரெடிட் காருக்கு செலுத்தவேண்டிய 1 லட்சத்து 15 ஆயிரத்து 808 ரூபாயை செலுத்த தவறியதாகவும் மேலும் தனது மகளின் கிரெடிட் கார்டில் ஓவர் டீவ் வைத்திருப்பதாகவும் இதனால் அவர்களது சிபில் ஸ்கோர் குறைவாக உள்ளதாலும் வங்கியானது அவருக்கு கடன் வழங்கவில்லை என்று கடந்த வருடம் அக்டோபர் மாதம் 13 ஆம் தேதி சதிஷ் வீட்டிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தது தெரியவந்துள்ளது.
வங்கியில் கடன் வாங்கிவிட்டு அதை முறையாக கட்டாமல் மத்திய அரசை குற்றம் சாட்டி நிர்மலா சீதாராமனை தலைகுனிய வைக்கும் நோக்கத்தோடு பேசிய சதிஷ் என்ற நபரை சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.