இடைத்தேர்தலில் பா.ஜ.க. அபாரம்!

இடைத்தேர்தலில் பா.ஜ.க. அபாரம்!

Share it if you like it

உத்தரப் பிரதேசத்தில் நடந்த நாடாளுமன்ற இடைத்தேர்தலில் பா.ஜ.க. அபார வெற்றிபெற்றிருக்கிறது.

நாட்டில் காலியாக இருந்த சட்டப்பேரவைத் தொகுதிகள் மற்றும் நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளுக்கு, கடந்த 23-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. அந்தவகையில், உத்தரப் பிரதேச மாநிலம் அசம்கர், ராம்பூர் ஆகிய மக்களவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை இன்று நடந்தது. இதில், ஆளும் பா.ஜ.க. அமோக வெற்றி பெற்றது. எதிர்க்கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. அதேபோல, வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை இன்று நடந்த நிலையில், 3 இடங்களில் பா.ஜ.க. அமோக வெற்றி பெற்றிருக்கிறது.

அதேபோல, ஆந்திர மாநிலம் அட்மகுர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில், ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. டெல்லி ராஜிந்தர் நகர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றது. மேலும், ஜார்க்கண்ட் மாநிலம் மன்டர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில், காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. பஞ்சாப் மாநில முதல்வராக இருக்கும் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த பகவந்த் மானின் சங்கரூர் மக்களவைத் தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் சிரோமணி அகாலி தளம் (அமிர்தசரஸ்) வேட்பாளர் சிம்ரஞ்சித் சிங் மான் வெற்றி பெற்றார். ஆளும் ஆம் ஆத்மி சார்பில் போட்டியிட்ட குர்மெயில் சிங்கை 7,000 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு நடைபெற்ற இடைத்தேர்தலில், ஆம் ஆத்மி கட்சி தோல்வி அடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதனால், முதல்வர் பகவந்த் மானுக்கு பெரும் பின்னடைவை ஏற்பட்டிருக்கிறது.


Share it if you like it