தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை திறக்காமல் கர்நாடக அரசு பிடிவாதம் பிடித்து வருகிறது. இந்த நிலையில் உரிய நீரை திறக்க வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் நீர் இருப்பு உள்ளிட்ட விபரங்களை சேகரித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் காவிரி நீர் பகிர்வு தொடர்பாக காவிரி மேலாண்மை ஆணையத்தின் 23-வது கூட்டம் இன்று (செவ்வாய்கிழமை) டெல்லியில் நடைபெற்றது இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு,கர்நாடகா புதுச்சேரி, கேரளா,ஆகிய மாநில அதிகாரிகள் கலந்து கொண்டனர். தமிழகத்துக்கு தேவையான 24,000 கன அடி தண்ணீரைத் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டுமென காவேரி மேலாண்மை ஆணையத்தில் தமிழக அரசு அதிகாரிகள் வலியுறுத்தினர். ஆனால் இதற்கு திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ள கர்நாடக அரசு,அணைகளில் தற்போது 47% தண்ணீர் மட்டுமே உள்ளதாக தெரிவித்துள்ளது.
தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது – கர்நாடகா திட்ட வட்டம்
Share it if you like it
Share it if you like it