தமிழிலும் மத்திய ஆயுத காவல்படைத் தேர்வு: உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவிப்பு!

தமிழிலும் மத்திய ஆயுத காவல்படைத் தேர்வு: உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவிப்பு!

Share it if you like it

சி.ஆர்.பி.எஃப். உள்ளிட்ட மத்திய ஆயுத காவல்படைகளில் கான்ஸ்டபிள் பணிக்கான தேர்வுகள், தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் நடத்தப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்திருக்கிறார்.

நாடு முழுவதும் உள்ள பல்வேறு ஆயுதப் படைகளில் ஆட்களை சேர்ப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் சி.ஏ.பி.எப். (CAPF) தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இத்தேர்வு ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மட்டுமே நடத்தப்பட்டு வருகிறது. இந்த சூழலில், மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், இனிவரும் காலங்களில் மத்திய ஆயுத காவல் படைகளுக்கான தேர்வுகள் ஆங்கிலம், ஹிந்தி தவிர, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது உள்ளிட்ட 13 மொழிகளில் நடைபெறும் எனவும், இது வரலாற்று சிறப்புமிக்க மாற்றம் எனவும் தெரிவித்திருக்கிறது.

மேலும், இந்த நடைமுறை அடுத்தாண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. பிராந்திய மொழிகளை ஊக்குவிக்கவும், அனைத்து மாநில இளைஞர்களுக்கும் வாய்ப்பளிக்கும் வகையிலும், பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் முடிவெடுத்திருப்பதாகவும், நாடு முழுவதும் பல லட்சம் பேர் எழுதும் இத்தேர்வை பல மொழிகளில் நடத்துவதால், அனைத்து மாநில இளைஞர்களுக்கான வாய்ப்பு அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சி.ஏ.பி.எப். தேர்வு, நாடு முழுவதும் எதிர்வரும் 2024 ஜனவரி 1-ம் தேதி நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it