கேப்டன் விஜயகாந்த் – திராவிட – ஊடக சதியால் திட்டமிட்டு வீழ்த்தப்பட்ட தமிழக அரசியல் ஆளுமை

கேப்டன் விஜயகாந்த் – திராவிட – ஊடக சதியால் திட்டமிட்டு வீழ்த்தப்பட்ட தமிழக அரசியல் ஆளுமை

Share it if you like it

தென்னிந்தியாவிற்கே உரிய கருத்த நிறம். தென்மாவட்ட அடையாளமான முறுக்கேறிய உடல் மொழி அதிரடி பேச்சு துணிச்சலான செயல்பாடுகள் என்று 70 களில் தமிழ் திரையுலகுக்கு தேவையான அத்தனை குணாதிசியம் நிரம்பப் பெற்றிருந்தவர் விஜயராஜ் என்னும் அந்த தெற்கத்திய இளைஞர். கல்வியில் ஈடுபாடு இல்லாத குடும்பத்தொழிலில் கவனம் செலுத்தி வந்த நிலையில் திரைப்படத்தின் மீது கொண்ட அதீத ஈடுபாடு பெரிய நடிகராக வேண்டும் திரைப்படத் துறையில் கால் பதிக்க வேண்டும் என்ற விருப்பத்தை குடும்பம் நிராகரித்த போதும் நண்பர்கள் கை கொடுக்க மதுரையிலிருந்து சென்னையை நோக்கி பயணித்தது அந்த அசாத்தியமான இந்திய ஆளுமை.

ஆரம்ப காலத்தில் அன்றாட வாழ்க்கையில் எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் துறை சார்ந்த எல்லா இடங்களிலும் வாய்ப்பு தேடி அலைவதும் இயல்பு வாழ்க்கை எதிர்கொள்வதிலும் அவர் பார்த்த சங்கடங்களும் இடர்பாடுகளும் தான் பின் நாளில் அவரை சக மனிதர்களின் இன்னல்களையும் ஏழ்மை நிலையில் இருப்பவர்களின் இடர்பாடுகளையும் தன்னால் முடிந்த வரையில் சரி செய்ய வேண்டும் என்ற மனிதாபிமானத்தில் உச்சத்தில் கொண்டு போய் அவரை நிறுத்தியது.

இனிக்கும் இளமை என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர். தூரத்தில் இடி முழக்கம் அலை ஓசை இன்று தொடர்ச்சியாக பயணிக்கத் தொடங்கினார். தன் அண்டை வீட்டுக்காரன் போன்ற இயல்பான உருவம் கணக்கச்சிதமான நடிப்பு ஆர்ப்பாட்டம் இல்லாத எளிமையான சுபாவம் என்று தமிழ் திரைப்படத் துறைக்கு அந்த நாளில் தேடிக் கொண்டிருந்த அத்தனை சுபாவத்தோடும் ஒரு இளைஞன் .அதுவும் மிகுந்த தொழில் ஈடுபாடும் அர்ப்பணிப்பான உழைப்பும் கொண்ட ஒரு இளைஞன் கிடைத்தது தமிழ் துறையுலகம் அவரை வாரி எடுத்து அவரின் முழு திறமையையும் பயன்படுத்த தொடங்கியதில் அவரின் வெற்றிப் பயணம் தொடங்கியது.

உழவன் மகன் என்ற வெற்றி படத்தின் மூலம் தமிழகத்தின் ஒவ்வொரு குடும்பத்தின் மகனாக அடையாளம் காணப்பட்டவர். ஊமை விழிகள் புலன் விசாரணையின் மூலம் தமிழக காவல்துறையின் அடையாளமாக வளர்ந்தவர். கேப்டன் பிரபாகரன் என்று சமூகத்தில் இருட்டடிப்பு செய்யப்பட்ட மறுபக்க நீதிகளையும் மக்கள் முன் வைத்தவர். வல்லரசு வாஞ்சிநாதன் நரசிம்மா என்று தேசத்தை அச்சுறுத்தும் மத பயங்கரவாத முகமூடியை வெளிக்கொணர்ந்து தேசிய நடிகராக இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு தேச பக்தி தேசிய சிந்தனை வளர்க்கும் அடையாள மனிதராக விஸ்வரூபம் எடுத்து நின்றார்.

திரைப்படத் துறையில் பணியாற்றும் பொழுது முன்னணி நடிகர்கள் இயக்குனர்கள் என்றால் ஒரு உபசரிப்பு சாதாரண தொழிலாளர்கள் என்றால் ஒரு உபசரிப்பு என்ற பாரபட்சமான நிலைக்கு முற்றுப்புள்ளி வைத்த மாமனிதர். உச்ச நடிகர் முதல் சாதாரண லைட் பாய் வரை அனைவருக்கும் ஒரே விதமான உணவு ஒரே விதமான உபசரிப்பு என்ற உண்மையான சமூக நீதியை செயல்படுத்தி காட்டிய புரட்சிக் கலைஞர் அவரே.தன்னை தங்களின் மகனாக சகோதரனாக தங்கள் குடும்பத்தில் ஒருவனாக கொண்டாடும் ரசிகப் பெருமக்களை தனது திருமணத்திற்கு மொத்தமாக அழைத்து அவர்களை அமர வைத்து ராஜ உபசரிப்பு செய்து தான் வாழும் வாழ்வு அவர்களால் தான் என்பதை உணர்ந்து வாழும் நன்றி உணர்வை வெளிப்படுத்திய பெரிய மனிதர் அவர்.

புதிய இயக்குனர் புதிய தயாரிப்பாளர் புதிய தொழில்நுட்பக் குழு என்று ஏதாவது ஒன்றை அமர்த்தி வாய்ப்பு கொடுக்கவே அஞ்சி நடுங்கிய திரையுலகில் புதிய இயக்குனர் புதிய நிறுவனம் தயாரிப்பாளர் தொழில்நுட்பக் குழு என்று அனைத்தையும் வாய்ப்பு கொடுத்து கை தூக்கி விட்ட துணிச்சல் காரர் அவர். இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் சக நடிகர்கள் தொழில் நுட்ப கலைஞர்கள் என்று அத்தனை பேரையும் நலனிலும் அக்கறையிலும் அவர்களின் தொழில் வருமானம் பாதிக்கப்பட்ட கூடாது என்பதில் தனிப்பட்ட அக்கறையும் ஈடுபாடும் காட்டிய உதாரண மனிதர் அவர். அவரால் அறிமுகமாகி வாழ்வு பெற்ற இயக்குநர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் ஏராளம் உண்டு.

மக்களால் வாழ்வு பெற்ற தான் அவர்களின் மூலம் கிடைக்கப்பெற்ற பணத்தை ஒரு பகுதியை அவர்களுக்கே திருப்பி தர வேண்டும் என்ற அரசு சிந்தனையோடு தான் உச்சத்தை எட்டிய காலம் முதல் தன் வருவாயின் ஒரு பகுதியை நலத்திட்டங்களுக்கென்று ஒதுக்கி ஏழை எளிய குழந்தைகளின் கல்வி மருத்துவம் திருமண உதவி வாழ்வாதார உதவி என்று வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியாமல் கொடுத்துக் கொடுத்து சிவந்த வள்ளல் கைகளுக்கு சொந்தக்காரர் அவர்.

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்னும் நியதிக்கேற்ப அந்த மதுரைக்கார கள்ளழகனுக்கு உற்ற துணையாக மீனாட்சி போல ஒரு துணை வாய்க்கப் பெற்றது. அவர் எண்ணம் போல திரைப்படத் துறையும் அதை கடந்து கல்வி நிறுவனங்கள் அரசியல் என்று தான் விரும்பிய துறைகளில் எல்லாம் கால் பதித்தார். தன் விருப்பம் போல எதிர்காலத்தை திட்டமிட்டு கால் பதித்த அத்தனையிலும் தனக்கென்று ஒரு இடத்தை எட்டிப் பிடித்து அத்தனை துறையிலும் வெற்றியாளராக சாதித்தார்.

அரசியல் கட்சி தொடங்க முற்பட்ட காலத்தில் ஆரம்பத்திலேயே அதை முடக்க வேண்டும் என்று எத்தனை இடர்பாடுகள் வந்த போதும் சொந்த வகையில் எவ்வளவோ பொருளாதார இழப்புகளை எதிர்கண்ட போதிலும் முன்வைத்த காலை பின் வைக்க மாட்டேன் என்று ரசிகர்களின் பேராதரோடு கட்சி தொடங்கியவர். போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே சட்டமன்ற உறுப்பினராக தனி மனிதனாக சட்டசபையில் ஐந்து ஆண்டுகள் மக்களின் குரலாக ஒலித்தவர். அடுத்த சட்டமன்றத் தேர்தலிலேயே இந்திய அரசியல் வரலாற்றில் இல்லாத வகையில் கட்சி தொடங்கிய 10 ஆண்டுகளுக்குள் எதிர்க்கட்சி அந்தஸ்து பெற்று சட்ட சபையில் கோலோச்சியவர். தமிழக அரசியலிலும் மக்கள் மனதிலும் கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு எதிர்க்கட்சியினர் மத்தியிலும் நன் மதிப்பையும் தனிப்பட்ட மக்கள் செல்வாக்கையும் இன்றளவும் கொண்டிருப்பவர்.

தெலுங்கு மொழியை தாய் மொழியாக கொண்ட போதிலும் தன்னை தமிழ் திரைப்படங்களில் மட்டுமே நடித்த தமிழ் பற்றாளர். திரைப்பட துறையால் ஆதாயம் தேடும் ஊடகங்கள் அதே திரைப்பட துறையின் பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்கவில்லை என்ற காரணத்தால் பல ஆண்டுகள் தொடர்ந்து ஊடகங்களை தள்ளி வைத்த துணிச்சல் காரர்.முன்கோபி பிடிவாதக்காரர் எதிர்க்கட்சிகள் நிர்வாகிகள் உள்ளிட்ட யாரையும் மதிக்க மாட்டார் .அனுசரித்து போகும் வழக்கம் இல்லாதவர். என்றெல்லாம் அடுக்கடுக்கான விமர்சனங்கள் குற்றச்சாட்டுகள் இருந்தாலும் அத்தனையும் கடந்து தனது கட்சிக்கு என்று ஒரு இடத்தையும் தனக்கென்று ஒரு உயர்ந்த ஆளுமையையும் தமிழக அரசியலில் தக்க வைத்தவர்.

ஆனால் தமிழகத்தை தாங்கள் ஆள வேண்டும் அல்லது தமிழகத்தை ஆள்பவர்களை தாங்கள் ஆள வேண்டும் .எந்த நிலையிலும் தமிழகத்தை தேசிய நீரோட்டத்தில் இணைய விடக்கூடாது . மக்கள் மத்தியில் அரசியல் சமூக விழிப்புணர்வு தேசிய சிந்தனையோ ஆன்மீக ஈடுப்பாடோ வளர விடக்கூடாது என்பதில் தெளிவாக இருந்த திராவிடம் தனக்கு எதிராக ஒரு மாற்று சக்தி உருவாவதையும் அவர் மக்கள் ஆதரவோடு வளர்ந்து வருவதையும் விரும்பாமல் தனிப்பட்ட வன்மம் கொண்டு அவரின் மீது எவ்வளவோ தனிமனித தாக்குதல்களையும் அடக்குமுறைகளையும் மலிவான விமர்சனங்களையும் முன்வைத்தது. ஆனால் அத்தனையும் கடந்து வந்து இதெல்லாம் தெரிந்து தான் அரசியலில் கால் பதித்திருக்கிறேன். அனைத்திற்கும் தயாராகவே இருக்கிறேன். நான் யார் என் நோக்கம் என்ன என்பது எனக்குத் தெரியும் என்னை நம்பி என் பின்னே இருக்கும் மக்களுக்கு தெரியும் மற்ற எதைப் பற்றியும் கவலையில்லை என்று துணிச்சலாக தமிழக அரசியலில் பயணித்தவர்.

ஆனால் விதியோ சதியோ என்ற விடை தெரியாத புதிரால் அவசியமான மருத்துவ சிகிச்சை மேற்கொண்ட போது அவரின் இயல்பு நிலை முடங்கியது. அவரின் சிம்ம குரலும் கம்பீரமான உடல் மொழியும் இனி காண்போமா என்ற நிலையில் ரசிகர்கள் கண்ணீர் சிந்தும் நிலையில் அவரின் உடல்நிலை பாதித்தது. ஆனால் ஆரம்ப காலத்தில் வெளிவராத இருந்த இந்த பாதிப்புகளை அதனால் ஏற்பட்ட அவரின் எதார்த்த இடர்பாடுகளை திட்டமிட்டு விஷமப் பிரச்சாரம் செய்து அவரின் மீது பெரும் எதிர்மறை பிம்பமும் மக்களின் இடையே அதிருப்தியும் சொந்த கட்சிக்காரர்கள் இடையே அவநம்பிக்கையும் ஏற்படும் விதமாக தமிழகத்தில் உள்ள தேச விரோத ஊடகங்களும் ஊடகவாதிகளும் திட்டமிட்டு விஷம பிரச்சாரம் செய்து அவர்களின் திராவிட விசுவாசத்தை மெய்ப்பித்தார்கள்.

ஒரு பக்கம் ஆளும் கட்சியும் ஆண்ட கட்சியும் கூட்டணி போட்டு தனது கட்சியை அரசியல் பயணத்தை முடக்க பார்க்கும் அவலம் . மறுபக்கம் தங்களின் தனிப்பட்ட விருப்பங்கள் எதிர்பார்ப்புகள் மனதில் வைத்து அந்த அடிப்படையில் கட்சி தவாராக இருந்த நிர்வாகிகள். இரண்டிற்கும் இடையில் அரசியல் ரீதியாக தொழில் ரீதியாக தன்னை முழுவதுமாக முடக்க வேண்டும் என்ற திராவிடத்தின் மறைமுக சதிகள் என்று அத்தனையும் ஈடுகொள்ள எதிர்த்து பதிலடி கொடுக்க முழு தகுதியும் திறமையும் துணியும் இருந்த போதிலும் உடல் நலம் ஒத்துழைக்காத நிலையில் தன்னை பாதுகாத்துக் கொள்வதே முதல் பணி என்ற நிலையில் அத்தனையும் விட்டு அமைதியாக ஓய்வில் இருப்பவர். ஆனாலும் கட்சியையும் ரசிகர்களையும் இன்றளவும் அவரது குடும்பம் தொடர்ந்து வழி நடத்தி வந்தாலும் கேப்டன் என்ற அந்த ஒற்றை மனிதரின் குரலுக்காகவும் கண் அசைவுக்காகவும் கட்டுப்பட்டு காத்திருக்கும் ஒரு பெரும் கூட்டம் இன்றளவும் அவர் இறையருளால் பூரண நலம் பெற்று மீண்டு வர வேண்டும் என்று காத்திருக்கிறது. அவரின் ஆளுமையாலும் துணிச்சலாலும் மீண்டும் தமிழக அரசியலில் அவர் தனது வெற்றிப் பயணத்தை தொடங்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வருகிறது.

தங்களுக்கு கிடைக்கும் தலைமை பதவி அதிகாரம் வைத்து எப்படி பணம் பண்ணலாம் ? .எப்படி தங்களின் அதிகாரத்தை நிலை நிறுத்தலாம்? என்று நினைக்கும் மனிதர்களுக்கும் மத்தியில் தென்னிந்திய திரைப்பட சங்கத்தின் தலைவராக பொறுப்பேற்ற நாள் முதல் அயராது உழைத்து திரைப்படத்துறை சார்ந்தவர்களின் பங்களிப்பையே மூலதனமாக வைத்து தென்னிந்திய திரைப்பட சங்கத்திற்கு என்று இருந்த பல கோடி ரூபாய் கடன்களை அடைத்தவர். தென்னிந்திய திரைப்பட சங்கத்திற்கென்று சொந்தமாக ஒரு கட்டிடம் இருக்க வேண்டும் என்ற முயற்சியை சாத்தியமாக காரணமானவர்.நலிந்த திரைப்படம் சார்ந்த கலைஞர்களுக்கு ஒரு நிரந்தரமான வாழ்வாதாரம் ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலுப்படுத்தியவர் என்று அவரின் திரைப்படம் சார்ந்த திரைத்தைறை கடந்த மனிதநேய நல்லெண்ண சிந்தனைகள் வரிசை கட்டி நிற்கிறது.

கேப்டன் விஜயகாந்த் நேர்மையாளர் திறமைசாலி துணிச்சல் காரர் என்ற பொழுதிலும் அரசியலில் இருக்கும் மலிவான சூழ்ச்சிகளையும் திராவிடம் தன் எதிரிகளை கையாளும் நாலாந்தர அரசியலையும் அறியாதவர். அதோடு அந்த திராவிட விசுவாசத்திலும் தேசவிரோதத்திலும் மலிந்து கிடக்கும் ஊடகங்கள் தன்னை குறிவைத்து வீழ்த்த துடிக்கும் சூழ்ச்சியையும் அறியாது வஞ்சத்தில் வீழ்ந்தவர். அவ்வகையில் திராவிட சூழ்ச்சியும் ஊடகங்களின் பொய் முகமும் ஒன்றிணைந்து விஜயகாந்த் என்பவரை அரசியல் பயணத்தை தேர்தல் வெற்றிகளை முடக்கி இருக்கலாம். அவரின் கட்சி அரசியலில் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கலாம். அவரால் மறுவாழ்வு பெற்ற திரைப்படத்துறை கூட நன்றி மறந்து அவரின் முதுகில் குத்தி இருக்கலாம். ஆனால் அத்தனையும் கடந்து அவரின் நல்லெண்ணமும் வள்ளல் குணமும் என்றைக்கும் மக்கள் மனதில் அவருக்கு தனித்துவமான ஒரு உயர்ந்த இடத்தை எப்போதும் வழங்கும். ஊடகங்களாலும் திராவிட அரசியலாலும் ஒருநாளும் அதை தடுக்கவோ தட்டி பறிக்கவோ முடியாது. அதுதான் கேப்டன் என்ற நல்ல மனிதரின் பலம் .விஜயகாந்த் என்னும் ஆளுமையின் மகத்துவம்.


Share it if you like it