பொதுவாக நாம் ஏலக்காயை வெறும் வாசனைக்காகவும், சுவைக்காவும் மட்டுமே பயன்படுத்துகிறோம். ஆனால், ஏலக்காயில் எவ்வளவு மருத்துவ குணங்கள் இருக்கின்றன என்பது தெரிந்தால் ஆச்சரியப்பட்டுப் போவீர்கள்!
ஏலக்காய் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டது. தினமும் ஏலக்காயை வாயில் போட்டு மென்று கொண்டிருந்தாலே போதும், நமது வாயும் கமகமக்கும், சர்க்கரையின் அளவும் கட்டுப்படும். மேலும், ஏலக்காய் வாய் சுகாதாரத்திற்கும், வாய் ஆரோக்கியத்திற்கும் ஏற்றது. பல் வலி, ஈறுகளில் ஏற்படும் வீக்கத்தை கட்டுப்படுத்தும் வல்லமை கொண்டது. அதுமட்டுமா, ஜலதோஷம், இருமல், தொடர்ச்சியான தும்மலால் அவதிப்படுபவர்கள் ஏலக்காய் கஷாயம் பருகினால், போயே போச்சு. ஆஸ்துமாவையே குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது ஏலக்காய்.
அதேபோல, ஏலக்காயில் ஆன்டி ஆக்சிடென்ட் என்படும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆற்றல் இருக்கிறது. இதனால், புற்றுநோய் கூட அருகில் வர அஞ்சும் என்கிறார்கள். தவிர, அஜீரணத்தால் அவதிப்படுகிறவர்கள் ஏலக்காயை மிளகுடன் சேர்த்து நெய்யில் வறுத்து பொடி செய்து சாப்பிட்டால், அஜீரணம் பூரண குணம். அதோடு, சுவாசக் கோளாறுகளை போக்கும் சக்தி ஏலக்காய்க்கு உண்டு. தினமும் உடற்பயிற்சி செய்பவர்கள் ஏலக்காய் எண்ணெயை நுகர்ந்து விட்டுச் சென்றால் போதும், ஆக்ஸிஜன் அற்புதமாகக் கிடைக்கும் என்கிறார்கள். களைப்பின்றி நீண்ட நேரம் உடற்பயிற்சி செய்ய முடியுமாம்.
மேலும், பஸ், ரயில், விமானங்களில் பயணிக்கும்போது சிலருக்கு தலைசுற்றல், வாந்தி, மயக்கம் போன்றவை ஏற்படும். இவர்கள் வெறும் 2 ஏலக்காயை வாயில் போட்டு மென்றால் போதும், தொல்லை இனி இல்லை. எல்லாவற்றுக்கும் மேலாக, பலரும் இரவில் தூக்கம் வராமல் உருண்டு புரண்டு கொண்டிருப்பார்கள். நீங்கள் இரவில் நன்றாக தூங்கம் வேண்டுமா, வெறும் 3 ஏலக்காயை வெந்நீரில் போட்டு குடிங்க, உங்களை மறந்து தூங்குங்க. அதுமட்டும் இல்லை, ஏலக்காய் ஆண்மையையும் கூட்டும் என்பது கூடுதல் தகவல். ஆகவே, சூயிங்கம், சிக்லெட், சாக்லேட் என எதையாவது வாயில் போட்டு அசை போடுவதா்கு பதிலாக தினமும் ஏலக்காயை வாயில் போட்டு மென்று சாப்பிடுங்கள், ஆரோக்கியத்தை கூட்டுங்கள்.