தமிழகத்துக்கு 2,700 கனஅடி தண்ணீரை திறக்க காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை !

தமிழகத்துக்கு 2,700 கனஅடி தண்ணீரை திறக்க காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை !

Share it if you like it

காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 90வது கூட்டம் இன்று டெல்லியில் தொடங்கிய நிலையில் நாளை முதல் டிசம்பர் இறுதி வரை தமிழ்நாட்டுக்கு தினமும் 2,700 கனஅடி தண்ணீர் திறக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றி கர்நாடகா அரசு தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும். ஆனால் கர்நாடகா அரசு தண்ணீர் திறந்து விடுவது இல்லை.

இந்நிலையில் தன் டெல்லியில் இன்று காவிரி ஒழுங்காற்று குழுவின் 90வது கூட்டம் நடக்கிறது. காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் தலைவர் வினீத் குப்தா தலைமையில் இன்று காலை 11.30 மணிக்கு டெல்லியில் தொடங்கியது. இந்த கூட்டத்தில் காணொலி மூலம் தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் நீர்வளத் துறை அதிகாரிகள், ஒழுங்காற்று குழு உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர்.

ஏனென்றால் மேட்டூர் அணையில் 23 டிஎம்சி தண்ணீர் தான் இருப்பு உள்ளது. இதனால் கர்நாடகா திறக்கும் தண்ணீரை முழுமையாக சேமிக்க முடியும் என கூறப்பட்டது. இதை கேட்ட காவிரி நீர் ஒழுங்காற்று குழு ‛‛கர்நாடகாவை வினாடிக்கு 2,600 தண்ணீர் திறந்து விட வேண்டும் என கூறியிருந்தோம். ஆனால் 5 ஆயிரம் முதல் 8 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இருப்பினும் முந்தைய நிலுவை தண்ணீர் திறக்க வேண்டியுள்ளது. இதனால் நாளை முதல் டிசம்பர் இறுதி வரை தமிழகத்துக்கு தினமும் 2,700 கனஅடி நீரை கர்நாடகா திறக்க பரிந்துரை செய்யப்படுகிறது” என கூறியது. இதன்மூலம் நாளை முதல் கர்நாடகா தமிழகத்துக்கு 2,700 கனஅடி தண்ணீரை டிசம்பர் இறுதி வரை திறக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it