2020 ம் ஆண்டு கணக்கின் படி அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகை 33 கோடி ஆனால் இந்திய சுமார் 100 தடுப்பூசிகளை தன் நாட்டு மக்களுக்கு செலுத்தி உள்ளது. மருத்துவத்துறையில் உலகின் வல்லரசு என இந்தியா நிரூபித்துள்ள இத்தருணத்தை உலக நாடுகள் பாராட்டி உள்ளன. குறிப்பாக பூட்டான், மாலத்தீவு, இஸ்ரேல் போன்ற நாடுகளும் உலக சுகாதார நிறுவனமும் கூட இந்திய பிரதமரை தனிப்பட்ட முறையில் பாராட்டி உள்ளனர்.
ஆனால் உள்நாட்டில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திமுக, உள்ளிட்ட கட்சிகள் ஒரு வாழ்த்துக்கூட தெரிவிக்காமல் இருப்பதோடு மக்களை மத்திய அரசுக்கு எதிராக திருப்பும் செயலில் ஈடுபட்டுள்ளன.
குறிப்பாக காங்கிரஸ் மூத்ததலைவர் பவன் கேர் “100 கோடி தடுப்பூசி செலுத்துவதற்கு தங்கள் பாக்கெட்டிலிருந்து செலவழித்த நாட்டு மக்களுக்கு நன்றி” என வன்மத்துடன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
மேலும் சீன அரசு 200 கோடி தடுப்பூசிகளை செலுத்திவிட்டதாக அறிவித்த பொழுது உலக நாடுகளே சந்தேகத்துடன் கேள்விகளை எழுப்பின. ஆனால் உள்ளூர் கம்யூனிஸ்டுகள் குறிப்பாக தமிழக கம்யூனிஸ்டுகள் “சாதனை செய்துள்ள மக்கள் சீனம்” என பட்டப்பெயர் வைத்து போஸ்டர் ராக்கெட்டுகளை பறக்கவிட்டன. ஆனால் இன்று சோறுபோட்ட தாய்நாட்டின் சாதனையை பாராட்டி ஒரு டுவிட்டர் பதிவுக்கூட போடவில்லை.
அடுத்ததாக நமது ஜப்பான் துணை முதல்வர்… மன்னிக்கவும்! தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தடுப்பூசி குறித்து பல சந்தேகங்களை எழுப்பி மக்களை தடுப்பூசிக்கு எதிராக திருப்பிவிட்டார். ஆனால் இன்றோ..! ஒரு வாழ்த்து கூட தெரிவிக்காமல் IPL, CSKவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இப்படி என்னதான் குட்டி கரணம் போட்டு மத்திய அரசுக்கு எதிராக மக்களை திருப்பினாலும். பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசின் மீது இந்திய மக்கள் வைத்திருக்கக்கூடிய நம்பிக்கையின் வெளிப்பாடாக தான் நாம் இன்று 100 கோடி தடுப்பூசிகளை எட்டி உள்ளோம் என்பது நிதர்சனமான உண்மை.
விக்னேஷ் வாசுதேவ்.R