நிருபர் கேட்ட கேள்வி… மோடிக்கு எதிரான கூட்டணி டமால்!

நிருபர் கேட்ட கேள்வி… மோடிக்கு எதிரான கூட்டணி டமால்!

Share it if you like it

தெலுங்கானா முதல்வரிடம் பிரதமர் வேட்பாளர் குறித்து எழுப்பிய கேள்விக்கு அவர் அளித்த பதிலில் கடுப்பான நித்திஷ் குமார் ஆவேசமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பா.ஜ.க., காங்கிரஸ் அல்லாத கூட்டணியை அமைக்க வேண்டும் என தெலுங்கானா முதல்வர் சந்திர சேகர் ராவ் மாநில கட்சிகளின் முதல்வர்களை சந்தித்து வருகிறார். இது ஒருபுறம் இருக்க, மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி அனைத்து கட்சிகளும், என்னை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும். மோடிக்கு மாற்று நான் தான் என தனக்கான ஆதரவினை திரட்டி வருகிறார்.

தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு ஆங்கிலமும், ஹிந்தியும் தெரியாது என்பதால் அவர் மற்ற மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவில்லை என்று சொல்லப்படுகிறது. தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பேனர்ஜி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தி.மு.க. தலைவர் ஸ்டாலின் என அனைவருக்கும் பிரதமர் ஆக வேண்டும் என்ற விருப்பம் உண்டு. எனவே, அந்தந்த மாநில முதல்வர்கள் தமக்கான ஆதரவு வட்டத்தை பெருக்கி வருகின்றனர்.

இப்படிப்பட்ட சூழலில், தெலுங்கானா முதல்வர் சந்திர சேகர் ராவ் பீகார் மாநிலத்திற்கு சென்று இருக்கிறார். இதையடுத்து, நித்திஷ் குமார், தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டவர்களுடன் ராவ் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, பத்திரிகையாளர்கள் இவ்வாறு கேள்வி எழுப்பினார்.

நித்திஷ் குமாரை நீங்கள் பிரதமர் வேட்பாளராக அறிவிப்பீர்களா? அவரை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பதில் சில கட்சிகளுக்கு கருத்து வேறுபாடு இருக்கலாம். முதலில், நாங்கள் கூட்டணியை உருவாக்க முயற்சி செய்கிறோம் என கூறியிருக்கிறார். பிரதமர் கனவில் இருந்த நிதிஷ் குமாருக்கு ராவின் கருத்து கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால், அவர் எழுந்து நிற்க அவரை சமாதானம் செய்து உட்கார வைக்கிறார். இதையடுத்து, அதே நிருபர் மற்றொரு கேள்வியை முன் வைக்கிறார். இதற்கு ராவ், கூட்டணி உருவான பின்பு அனைவரும் உட்கார்ந்து பேசி புதிய முகத்திற்கு கூட நாங்கள் வாய்ப்பு வழங்குவோம் என தெரிவித்து இருக்கிறார். இதனால், மீண்டும் உஷ்ணமான நித்திஷ் குமார் மறுபடியும் எழுந்து நின்ற காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இவர்களிடம் நாட்டை ஒப்படைத்தால், திங்கள் கிழமை சரத் பவார் பிரதமர், செவ்வாய் கிழமை மம்தா பேனர்ஜி, புதன் கிழமை ராகுல் காந்தி, வியாக்கிழமை சந்திரபாபு நாயுடு, வெள்ளி கிழமை மாயாவதி, சனிக்கிழமை ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை இந்தியாவிற்கே விடுமுறை என நாட்டை துண்டு துண்டாக உடைத்து விடுவார்கள் என்பது பலரின் கருத்து.


Share it if you like it