உலகின் சிறந்த மாணவி: நடாஷா பெரியநாயகம் மீண்டும் சாதனை!

உலகின் சிறந்த மாணவி: நடாஷா பெரியநாயகம் மீண்டும் சாதனை!

Share it if you like it

உலகின் புத்திசாலி மாணவர்கள் பட்டியலில் அமெரிக்க வாழ் இந்திய மாணவியான நடாஷா பெரியநாயகம் 2-வது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் நிறுவனம்தான் Johns Hopkins Center for Talented Youth (சிடிஓய்). இந்த நிறுவனம், உலகம் முழுவதும் உள்ள பள்ளி மாணவர்களுக்கு ஆண்டுதோறும் சிடிஒய் எனும் தேர்வை நடத்தி வருகிறது. இந்த தேர்தவில், மாணவர்கள் பயிலும் பாடத்திட்டம் மற்றும் மேற்பட்ட வகுப்புகளுக்குரிய பாடதிட்டங்களில் இருந்து கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன.

அந்தவகையில் கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்வில் சுமார் 76 நாடுகளைச் சேர்ந்த 15,300 மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில், 27% சதவீதத்துக்கும் குறைவான மாணவர்கள் மட்டுமே உலகின் திறமையான மாணவர்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இதில், வெற்றி பெற்ற மாணவர்களை சிடிஒய் அமைப்பு வெகுவாக பாராட்டியுள்ளது.

அந்த வகையில், அமெரிக்கா வாழ் இந்திய மாணவியான நடாஷா பெரியநாயகம் தொடர்ந்து 2-வது முறையாக வெற்றி பெற்றுள்ளார். இவர், கடந்த 2021 -ல் நடைபெற்ற தேர்விலும் வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. மற்ற மாணவர்களை காட்டிலும் இவர் அதிக மதிப்பெண்களை பெற்றுள்ளார். நடாஷாவின் பெற்றோர்கள் சென்னையை பூர்வீகமாக கொண்டவர்கள்.


Share it if you like it