நடுரோட்டில் மாணவிகள் குடுமிப்பிடி: காலம் கலிகாலம் ஆகிப்போச்சுங்க..!

நடுரோட்டில் மாணவிகள் குடுமிப்பிடி: காலம் கலிகாலம் ஆகிப்போச்சுங்க..!

Share it if you like it

கலி முத்திப் போச்சு என்பார்களே அதை மெய்ப்பிக்கிறது சென்னையில் நடந்திருக்கும் ஒரு சம்பவம்.

இன்றைய மாணவ சமுதாயம் எதை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்பதை நினைக்கும்போதே நெஞ்சம் பதறுகிறது. கடந்த 20 வருடங்களுக்கு முன்பெல்லாம் மாணவர்களை நல்வழிப்படுத்த ஆசிரியர்கள் பிரம்பு கொண்டு அடித்தார்கள். ஆனால் இன்று, ஆசிரியர்களை மாணவர்கள் தாக்குகிறார்கள். ஓடும் ரயிலில் சாகசம் காட்டுகிறார்கள். கத்தியை வைத்துக் கொண்டு பொதுமக்களை அச்சுறுத்துகிறார்கள். நடு ரோட்டில் ரவுடிகளைப் போல சண்டைப் போட்டுக் கொள்கிறார்கள். தலை முடியை கன்னாபின்னாவென வெட்டிக் கொள்கிறார்கள்.

பெண்களைப் போல காதில் தோடு, மூக்கில் மூக்குத்தி, போதாக்குறைக்கு புருவத்தில் வளையம் என்று டிசைன் டிசைனாகத் திரிகிறார்கள். பார்க்கவே அருவெறுப்பாகவும், பயமாகவும் இருக்கிறது. இவர்களெல்லாம் மாணவர்கள்தானா என்கிற சந்தேகமும் எழுகிறது. தவிர, விதவிதமான பைக்குகளை வைத்துக் கொண்டு அதிக ஒலி எழுப்பும் வகையிலான சைலன்சர்களை மாட்டிக் கொண்டு, சர்… புர்… என இவர்கள் ரோட்டில் செல்வதைப் பார்த்தாலே குலை நடுங்குகிறது. சரி, மாணவர்கள்தான் இப்படியென்றால் மாணவிகளின் கதையோ இதைவிட மோசமாக இருக்கிறது.

தாவணி, சுடிதார் போன்ற ஆடைகள் மாறி பேன்ட், டீசர்ட் என்று மாறி, பிறகு லெக்கின்ஸ் டாப்ஸ் என்று உருமாற்றம் அடைந்து தற்போது ஸ்லீவ் லெஸ் பனியன், அரைக்கால் டவுசர் என்கிற லெவலுக்கு வந்தது விட்டது. ஒரு சில மாணவிகள் ஆடை அணிந்திருக்கிறார்களா இல்லையா என்று சந்தேகிக்கும் வகையில், மெலிதான ஆடைகளை அணிந்து ஆபாசம் காட்டுகிறார்கள். கேட்டால் பெண்ணுரிமை என்கிறார். இதுபோன்ற ஆபாசங்கள்தான் சில அசம்பாவிதங்களுக்கும் வித்திட்டு விடுகிறது என்பதை மறுக்க முடியாது. ஆகவே, இந்த விஷயத்தில் மாணவ, மாணவிகளின் பெற்றோரை குறைசொல்லாமல் இருக்க முடியாது.

இந்த நிலையில்தான், கலி முத்திப்போச்சு என்று சொல்லும் அளவுக்கு ஒரு சம்பவம் அரங்கேறி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. சென்னை அண்ணாநகரில் இயங்கி வருகிறது ஒரு தனியார் கல்லூரி. இங்கு பயிலும் மாணவிகள் சிலர் நேற்று மதியம் பேருந்துக்காக காத்திருந்தனர். அப்போது, திடீரென இரு மாணவிகளுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில், என் ஆளுக்கிட்ட எப்புடி டீ நீ பேசலாம் என்று பேசியபடியே, மற்றொரு மாணவியின் தலைமுடியை கொத்தாகப் பிடித்தார் இன்னொரு மாணவி. பதிலுக்கு அந்த மாணவியும் தலைமுடியை பிடிக்க, இருவரும் கட்டிப்புரளாத குறையாக சண்டைப் போட்டுக் கொண்டனர். இதிலிருந்து ஒரு மாணவனுக்காக இரு மாணவிகள் மோதிக் கொள்வது தெரியவந்தது.

அதாவது, திருடா திருடி படத்தில் நடிகர் தனுஷுக்காக இரு பெண்கள் மோதிக் கொள்வதை நினைவுபடுத்தும் வகையில் இருந்தது இக்காட்சி. இந்தக் காட்சியை அங்கு நின்றிருந்த மாணவர்கள் வீடியோவாக எடுத்ததோடு, ஒன்ஸ் மோர் கேட்டு கிண்டலடித்து மகிழ்ந்தனர். பின்னர், இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து விட்டனர். இதுதான் தற்போது வைரலாகி வருகிறது. இதைப் பார்ப்பவர்கள், கலி முத்திப் போச்சு என்று அங்கலாய்க்கிறார்கள். பொதுவாக, ஒரு பெண்ணுக்காக இரு மாணவர்கள் மோதிக் கொள்வதை கேள்விப்பட்டிருப்போம். சமயத்தில் பார்த்தும்கூட இருப்போம். ஆனால், இங்கு ஒரு பையனுக்காக இரு மாணவிகள் மோதிக் கொண்ட சம்பவம் காலம் கலிகாலம் ஆகிப்போச்சு என்பதைத் தவிர வேறென்ன சொல்ல முடியும்.


Share it if you like it