ரூ.1 லட்சம் லஞ்சம் கேட்ட தி.மு.க. கவுன்சிலர்: வைரலாகும் வீடியோவால் பரபரப்பு!

ரூ.1 லட்சம் லஞ்சம் கேட்ட தி.மு.க. கவுன்சிலர்: வைரலாகும் வீடியோவால் பரபரப்பு!

Share it if you like it

சென்னை மாநகராட்சி தி.மு.க. கவுன்சிலர் ஒருவர், வரதட்சணை புகார் கொடுக்காமல் இருக்க 1 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி சந்தி சிரிக்கிறது.

சென்னை மாநகராட்சி 16-வது வார்டு கவுன்சிலராக இருப்பவர் மணலி புது நகர் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன். அதே பகுதியைச் சேர்ந்தவர் குணசேகர். இவரது மகன் ஆனந்துக்கும், சடையங்குப்பத்தைச் சேர்ந்த தனலட்சுமி மகள் திவ்யாவுக்கும் கடந்தாண்டு திருமணம் நடந்தது. ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக இரண்டே மாதங்களில் கணவரை விட்டு பிரிந்த திவ்யா, தனது தாய் வீட்டிற்கே திரும்பிச் சென்று விட்டார். இதையடுத்து, திவ்யாவின் தாய் தனலெட்சுமி, மாநகராட்சி கவுன்சிலர் ராஜேந்திரன் உள்ளிட்ட 15 பேரை அழைத்துச் சென்று மாப்பிள்ளை வீட்டாரிடம் இருந்து சீர்வரிசை பொருட்களை அள்ளிச் சென்றிருக்கிறார்.

இதன் பிறகு, மாப்பிள்ளை வீட்டிலுள்ள பெண்களை தனது வீட்டுக்கு அழைத்து பஞ்சாயத்து பேசிய ராஜேந்திரன், வரதட்சனை வழக்கு போடாமல் இருக்கவும், சுமூகமாக பிரச்னையை முடித்துக் கொள்ளவும், பெண் வீட்டார் 1 லட்சம் ரூபாய் கேட்பதாக கூறியிருக்கிறார். அதற்கு, பெண்ணின் பெயரில் காசோலையாகவோ அல்லது அவருத வங்கிக் கணக்கிலோ பணத்தை செலுத்துவதாகக் கூறியிருக்கிறார்கள் மாப்பிள்ளை வீட்டார். ஆனால், 1 லட்சம் ரூபாய் ரொக்கமாகத் தான் தரவேண்டும் என்று கவுன்சிலர் ராஜேந்திரன் அடம் பிடித்திருக்கிறார். இதற்கு, மாப்பிள்ளை வீட்டார் மறுத்துவிட்டனர்.

இதனால் ஆத்திரமடைந்த ராஜேந்திரன், கடந்த மாதம் 18-ம் தேதி மாப்பிள்ளை வீட்டாரை வீட்டுக்கு வரவழைத்து, அவர்களிடமிருந்து 5 பவுன் நகைகளை பறித்துக் கொண்டதாகவும், பெண் வீட்டார் தங்களுக்கு தரவேண்டிய ஆறரை பவுன் நகை குறித்து கேட்டபோது, ஆதரவாளர்களை வைத்து மிரட்டியதாகவும் கூறப்டுகிறு. இதுகுறித்து மாப்பிள்ளை வீட்டார் ஆவடி போலீஸ் கமிஷனிரடம் வீடியோ ஆதாரத்துடன் புகார் அளிந்தனர். இதுகுறித்த விசாரிக்க மாதவரம் பால்பண்ணை உதவி கமிஷனருக்கு உத்தரவிடப்பட்டது.

இதனிடையே, தி.மு.க. கவுன்சிலர் ராஜேந்திரன் கட்டப்பஞ்சாயத்து செய்ததை, மாப்பிள்ளை வீட்டார் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து விட்டனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், மணப்பெண் வீட்டார் திருமணத்தின்போது பைக் வாங்குவதற்காக கொடுத்த பணத்தை, மாப்பிள்ளை வீட்டாரிடம் திரும்பிக் கேட்டதால், தன் மீது நகை பறித்ததாக தவறாக புகார் அளிக்கப்பட்டிருதாக கவுன்சிலர் ராஜேந்திரன் விளக்கம் கொடுத்திருக்கிறார். இந்த வீடியோவை பார்த்த பலரும் தி.மு.க.வினரின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it