சென்னை கொளத்தூரில் நடந்து பொங்கல் விழாவில், ஸ்டாலின் கொடுத்த கீரைக் கட்டை பசு மாடு சாப்பிடவே இல்லை. இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியான நிலையில், கரடியே காறித் துப்பிய மொமண்ட் என்று நெட்டிசன்கள் பலரும் ஸ்டாலினை கலாய்த்து வருகின்றனர்.
தி.மு.க.வை பொறுத்தவரை, ஹிந்து விரோத கட்சி என்பது பொதுவான குற்றச்சாட்டாக இருந்து வருகிறது. அதற்கேற்ப அக்கட்சியின் தலைவர்கள், நிர்வாகிகள் பலரும் ஹிந்துக்களுக்கு எதிராகவும், ஹிந்து மதத்துக்கு எதிராகவும், ஹிந்து கடவுள்களுக்கு எதிராகவும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். மேலும், ஹிந்து மத பண்டிகைகளுக்கு தி.மு.க. தலைவர்கள் வாழ்த்துக் கூட தெரிவிப்பதில்லை. அதோடு, ஹிந்துக்கள் புனிதமாகக் கருதம் விபூதி, குங்குமமும் அணிவதில்லை. அவ்வளவு ஏன், ஸ்ரீரங்கம் கோயிலுக்குச் சென்றிருந்தபோது நெற்றியில் இடப்பட்ட விபூதி, குங்குமத்தை அங்கேயே அழித்தவர்தான் ஸ்டாலின்.
மேலும், இஸ்லாமிய திருமண விழாவில் கலந்துகொண்டு ஹிந்து மத திருமணச் சடங்கை கேலி செய்தார் ஸ்டாலின். அதேபோல, திருப்பதிக்குச் சென்றிருந்த கனிமொழி, உண்டியலுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்ததை கிண்டல் செய்தார். இப்படி பல்வேறு சந்தர்ப்பங்களில் ஹிந்துக்களையும், ஹிந்து மத சடங்குகளையும், கடவுள்களை ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்ட தி.மு.க. தலைவர்கள் பலரும் அவமரியாதை செய்தது ஹிந்துக்கள் மத்தியில் அதிருப்தியையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தி இருந்தது.
இந்த சூழலில்தான், வருகிற 15-ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவிருக்கிறது. இதையொட்டி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சமத்துவ பொங்கல் விழாவை தி.மு.க.வினர் நடத்தி வருகின்றனர். அந்த வகையில், முதல்வர் ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் நேற்று சமத்துவ பொங்கல் விழாவை நடத்தினார். இந்த விழாவில், ஸ்டாலின் மனைவி துர்காவும் கலந்துகொண்டார். விழாவின் ஒரு பகுதியாக ஸ்டாலின் பசுமாட்டுக்கு அகத்திக்கீரை கட்டை வழங்கினார். ஆனால், அக்கீரையை சாப்பிட பசுமாடு மறுத்து விட்டது.
இதையடுத்து, துர்கா ஸ்டாலின் அந்த கீரைக்கட்டை வாங்கி பசுமாட்டுக்குக் கொடுத்தார். அப்போதும், அக்கீரைக்கட்டை பசு மாடு சாப்பிட மறுத்துவிட்டது. இதனால் ஸ்டாலின் முகம் வெளிறிப்போய் விட்டது. பிறகு, இருவரும் பொங்கல் வைத்தனர். அப்போது, அங்கிருந்தவர்கள் முதல்வர் ஸ்டாலினுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்து, செல்பி எடுத்துக் கொண்டனர். பின்னர், பொதுமக்களுக்கு பொங்கல் நலத்திட்ட உதவிகளை ஸ்டாலின் வழங்கினார்.
இந்த காணொளிதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த பலரும், எப்படி கீரைக்கட்டை பசுமாடு சாப்பிடும். செய்த பாவங்கள் அப்படி என்றும், கர்மா தனது வேலையை காட்டத் தொடங்குகிறது என்றும், கோமாதாவுக்குத் தெரியாதா அந்த பாவப்பட்ட கைகளால் கொடுக்கும் உணவை எப்படி சாப்பிடும்? கோயில் கோயிலாக போய் நடித்தால் போதுமா? தட் கரடியே காறித்துப்பிய மொமண்ட் என்றெல்லாம் நெட்டிசன்கள் வெளுத்து வாங்கி வருகின்றனர்.