ரயில் நிலையில் பெண் சரமாரியாக வெட்டி கொலை… தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சூப்பர்… நம்புங்க மக்களே!

ரயில் நிலையில் பெண் சரமாரியாக வெட்டி கொலை… தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சூப்பர்… நம்புங்க மக்களே!

Share it if you like it

சென்னை சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் பெண் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டிருக்கிறார். ஆனால், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சூப்பராக இருப்பதாக முதல்வர் தம்பட்டம் அடித்துக் கொள்கிறார்.

சென்னை மீனம்பாக்கம் எம்.ஜி.ஆர். நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜி (எ) ராஜேஷ்வரி. 34 வயதான இவர், மின்சார ரயிலில் சமோசா மற்றும் பழ வியாபாரம் செய்து வந்தார். நேற்று மாலையும் வழக்கம்போல எழும்பூரில் இருந்து கிண்டி நோக்கிச் சென்ற மின்சார ரயிலில் பழம் மற்றும் சமோசா வியாபாரம் செய்தார். இந்த ரயில் இரவு 8.30 மணியளவில் சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் நின்றபோது, ரயிலில் இருந்து இறங்கிய ராஜேஷ்வரி நடைமேடையில் சமோசா மற்றும் பழ வியாபாரம் செய்தார். அப்போது, ரயிலில் இருந்து இறங்கிய 4 பேர் கையில் வைத்திருந்த கத்தி மற்றும் அரிவாளால் திடீரென ராஜேஷ்வரியின் தலை மற்றும் கழுத்து பகுதியில் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர்.

படுகாயமடைந்த ராஜேஷ்வரியை ரயில்வே போலீஸார் மீட்டு சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அதிகாலையில் ராஜேஸ்வரி உயிரிழந்தார். இக்கொலை தொடர்பாக மாம்பலம் ரயில்வே போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் வெட்டுப்பட்ட ராஜேஸ்வரி 3 பேரை திருமணம் செய்திருப்பதும், 3-வது கணவர் சமீபத்தில் கொலை செய்யப்பட்டதால், 2-வது கணவருடன் வசித்து வந்ததும் தெரியவந்தது.

ஆகவே, தகாத உறவின் காரணமாக இக்கொலை நடந்ததா? அல்லது வேறு காரணமா என்பது குறித்து மாம்பலம் ரயில்வே போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சம்பவ இடத்தில் இருந்த சி.சி.டி.வி. காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 2016-ம் ஆண்டு நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்ற இளம்பெண் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தலைநகரை கிடுகிடுக்க வைத்த நிலையில், தற்போது மீண்டும் ஒரு சம்பவம் ரயில் நிலையத்தில் அரங்கேறி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இக்கொலையை நேரில் பார்த்த இளம்பெண் அளித்த பேட்டி, போலீஸ் எவ்வளவு அலட்சியமாக நடந்து கொண்டனர் என்பதை தெளிவாக விளக்குகிறது.

தமிழகத்தில் நாள்தோறும் இப்படி கொலை, கொள்ளைகள், செயின் பறிப்பு போன்ற சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டிருந்தாலும், சட்டம் ஒழுங்கு சூப்பராக இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் தம்பட்டம் அடித்துக் கொள்கிறார் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it