சாக்கடைக்குள் விழுந்த சிறுமி… திராவிட மாடல் ஆட்சியின் அவலம்!

சாக்கடைக்குள் விழுந்த சிறுமி… திராவிட மாடல் ஆட்சியின் அவலம்!

Share it if you like it

திராவிட மாடல் ஆட்சி தமிழகம் முழுவதும் சிரிப்பாய் சிரித்து வருகிறது. தற்போது தலைநகர் சென்னையிலேயே பல்லைக்காட்டி இருக்கிறது.

தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு எதற்கெடுத்தாலும் திராவிட மாடல் ஆட்சி என்று கூறிவருகின்றனர். ஆனால், தமிழகம் முழுவதும் கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம், மத மாற்றம் போன்ற சம்பவங்கள்தான் அதிகரித்து வருகின்றன. மேலும், ஹிந்து மதத்தின் மீதும், ஹிந்து தெய்வங்கள் மீதுமான தாக்குதல் அதிகரிக்கத் தொடங்கி இருக்கின்றன. குறிப்பாக, கருப்பர் கூட்டம், பெரியாரிஸ்ட்கள், திராவிடக் கழகத்தினர் இத்தகைய தாக்குதல்களில் அதிகம் ஈடுபட்டு வருகின்றனர். தவிர, மத்திய அரசின் திட்டங்களை தமிழக அரசின் திட்டங்களைப் போல சித்தரித்து ஸ்டிக்கர் ஒட்டி வருகிறார்கள். இதனால், இதுதான் திராவட மாடல் ஆட்சியோ என்று நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில்தான், சென்னையில் திராவிட மாடல் ஆட்சியின் அவலம் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. சென்னை சோழிங்கநல்லூர் நகராட்சி 6-வது வார்டில் வசித்து வருபவர் விவேக். இப்பகுதியில் சாக்கடை அடைப்பு எடுப்பதாகக் கூறி, 10 நாட்களுக்கு முன்பு சாக்கடையை உடைத்து ஆங்காங்கே குழிதோண்டி இருக்கிறார்கள். இதில், வீட்டுக்கு முன்புறமும் சாக்கடையை உடைத்து குழியை தோண்டி வைத்திருக்கிறார்கள். ஆனால், இதுவரை குப்பையையும் வாரவில்லை, உள்ளே அடைத்திருக்கும் மண்ணையும் எடுக்கவில்லை.

இந்த சூழலில், விவேக் நேற்று தனது 2 வயது பெண் குழந்தையுடன் ஸ்கூட்டரில் கடைக்குச் சென்று விட்டு திரும்பி இருக்கிறார். வீட்டிற்கு முன்பு வாகனத்தை நிறுத்திவிட்டு, குழந்தையை இறக்கி விட்டிருக்கிறார். விவேக் இறங்கி வருவதற்குள் அக்குழந்தை வீட்டை நோக்கி நடந்து சென்றிருக்கிறது. அப்போது, பாதாள சாக்கடையை உடைத்துவிட்டு வெளியே வைக்கப்பட்டிருந்த சிமென்ட் சிலாப்பில் கால் தடுக்கி, சாக்கடை பள்ளத்துக்குள் விழுந்து விட்டது குழந்தை. இதைக்கண்ட விவேக் அடித்துப் பிடித்து ஓடிவந்து சாக்கடைக்குள் குதித்து குழந்தை மீட்டு வெளியேற்றினார்.

இதைக்கண்ட அக்கம்பக்கத்தினரும் விரைந்து வந்து, சாக்கடை பள்ளத்துக்குள் இருந்த விவேக்கை மீட்டனர். இதில் விவேக்கின் குழந்தைக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அக்குழந்தை அங்குள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதுகுறித்து விவேக் கூறுகையில், “இப்பகுதியில் எல்லோர் வீட்டிலும் சின்ன சின்ன குழந்தைகள் இருக்கிறார்கள். எனவே, நீங்கள் சாக்கடை அடைப்பை எடுத்தாலும் சரி, எடுக்காவிட்டாலும் சரி சாக்கடையை அடைத்து வையுங்கள். குழந்தைகள் தவறி விழுந்து விட்டால் என்னாகும்? என்று கடந்த ஒருவாரமாக நகராட்சி நிர்வாகத்திடம் சொல்லி வருகிறோம். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது எனது குழந்தை சாக்கடைக்குள் விழுந்து விட்டது. அடுத்தது வேறு யாருடைய குழந்தையும் சாக்கடைக்குள் விழுவதற்கு முன்பு சாக்கடையை அடைக்க வேண்டும். மேலும், 2 வருடத்துக்கு முன்பு 3 தெருவுக்கு நடுவில் ஒரு சாக்கடையை உடைத்தார்கள். அதை இன்னும் அடைக்கவில்லை. வெறும் செங்கல்லையும், கல்லையும் வைத்து அடைத்து வைத்திருக்கிறார்கள். இது எப்போது உடைந்து விழுந்து பெரும் விபத்தை ஏற்படுத்தப் போகிறதோ” என்றார் விரக்தியுடன்.

இது ஒருபுறம் இருக்க, சென்னை பெருங்குடியில் உள்ள குப்பைக் கிடங்கில் நேற்று திடீரென தீப்பற்றி எரிந்தது. இந்த தீயின் காரணமாக ஏற்பட்ட புகையால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் மூச்சுத்திணறலால் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த தீயை அணைக்க முடியாமல் திணறி வருகிறது திராவிட மாடல் தி.மு.க. அரசு.


Share it if you like it