சென்னையில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் திரையிடப்பட்ட தியேட்டர் மீது இஸ்லாமிய அடிப்படைவாதிகள் தாக்குதல் நடத்தி, அங்கிருந்த பேனர் உள்ளிட்டவற்றை கிழித்து சேதப்படுத்தினர்.
கேரளாவில் லவ் ஜிகாத் மூலம் அப்பாவி ஹிந்து பெண்கள் மதம் மாற்றப்பட்டு, ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத முகாம்களுக்கு அனுப்பப்பட்டு வருவதை, அப்பட்டமாகப் படம் பிடித்து காட்டி இருக்கிறது தி கேரளா ஸ்டோரி திரைப்படம். இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் தயாரிக்கப்பட்டிருக்கிறது. இப்படம் இன்று நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில், தமிழகத்திலும் வெளியாகி இருக்கிறது.
இந்த சூழலில், சென்னை தி.நகர் ஏ.ஜி.எஸ். தியேட்டரில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதையடுத்து, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினர் அத்தியேட்டர் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தியேட்டரின் முன்புறம் வாசலில் வைக்கப்பட்டிருந்த திரைப்படத்தின் பேனர்களை கிழித்து எறிந்தனர். மேலும், அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் உள்ளிட்டவற்றையும் சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தி.நகர் போலீஸார் கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்தில் வைத்துள்ளனர். இச்சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.