பயங்கரவாதிகள் முகத்திரையை கிழிக்கும் திரைப்படம்: ‘தி கேரளா ஸ்டோரி’ சினிமாவுக்கு பிரதமர் சர்டிபிகேட்!

பயங்கரவாதிகள் முகத்திரையை கிழிக்கும் திரைப்படம்: ‘தி கேரளா ஸ்டோரி’ சினிமாவுக்கு பிரதமர் சர்டிபிகேட்!

Share it if you like it

பயங்கரவாதிகளின் முகத்திரையை கிழிக்கும் திரைப்படமாக தி கேரளா ஸ்டோரி சினிமா அமைந்திருக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி பாராட்டி இருக்கிறார்.

பாலிவுட் இயக்குனர் சுதிப்தா சென் இயக்கத்தில் இன்று இந்தியா முழுவதும் வெளியாகி இருக்கும் திரைப்படம் தி கேரளா ஸ்டோரி. கேரளாவில் ஹிந்து மதத்தைச் சேர்ந்த சுமார் 30,000 பெண்கள் லவ்ஜிகாத் மூலம் மதமாற்றப்பட்டு, ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேர்க்கப்பட்டிருப்பதாக கதையின் கரு அமைந்திருக்கிறது. இத்திரைப்படத்துக்கு தடை கோரி, சென்னை, கேரளா உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டன. ஆனால், தடை விதிக்க நீதிமன்றங்கள் மறுத்துவிட்டன. இதைத் தொடரந்து, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இத்திரைப்படம் திரையிடப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், கர்நாடகாவில் சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி தி கேரளா ஸ்டோரி திரைப்படம் பற்றி பேசுகையில், “பயங்ரவாதிகளின் சதி வேலைகளை தோலுரித்துக் காட்டும் திரைப்படமாக தி கேரளா ஸ்டோரி சினிமா அமைந்திருக்கிறது. பயங்கரவாதிகள் குறித்த உண்மையை எடுத்துக் கூறும் அருமையான திரைப்படம் இது. இப்படத்தைத்தான் காங்கிரஸ் கட்சி எதிர்க்கிறது. பயங்கரவாதிகளின் முகத்திரையை கிழிக்கும் எந்தவொரு படத்தையும் காங்கிரஸ் எதிர்க்கும். வெறும் ஓட்டுக்காக பயங்கரவாதிகளிடம் காங்கிரஸ் மண்டியிட்டு வருகிறது. பயங்கரவாதத்தாலும், வன்முறையாலும் இந்தியா நீண்டகாலமாக பாதிக்கப்பட்டு வந்தது. ஆனால், வாக்கு வங்கிக்காக இதை தடுக்கக் கூட காங்கிரஸ் முன்வரவில்லை. பயங்கரவாதத்தில் இருந்து இந்நாட்டைக் கூட பாதுகாக்க முடியாத காங்கிரஸா, கர்நாடகாவை காக்கப் போகிறது?” என்று கூறினார்.


Share it if you like it