முதல்வர் ஸ்டாலின் சொன்னதையே கேட்ட மறுத்து விட்டேன். எந்த நேரத்திலும் எனது எம்.பி. பதவியை தூக்கி எறியத் தயாராக இருக்கிறேன் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் ஆவேசமாகக் கூறியிருக்கிறார்.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில துணைச் செயலாளர் மு.வீரபாண்டியன், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், ம.தி.மு.க. தலைமை கழகச் செயலாளர் துரை.வைகோ, மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் அப்துல் சமது, திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி உட்பட பலரும் கலந்துகொண்டு பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய திருமாவளவன், “நான் பதவிக்கு ஆசைப்படுபவன் கிடையாது. ஏற்கெனவே இரண்டே வருடத்தில் எம்.எல்.ஏ. பதவியை துறந்து விட்டு வந்தேன். தற்போதும், எந்த நேரத்திலும் எனது எம்.பி. பதவியை தூக்கி எறிய தயாராக இருக்கிறேன். பா.ம.க., பா.ஜ.க. இருக்கும் கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இடம் பெறாது. முதல்வர் ஸ்டாலின் சொன்னதையே கேட்க மறுத்து விட்டவன் இந்த திருமாவளவன்” என்று கூறியிருக்கிறார். திருமாவளவனிடம் ஸ்டாலின் என்ன சொன்னார்? அதை ஏன் திருமா கேட்க மறுத்துவிட்டார்? தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டிருக்கும் வீடியோவை பார்க்கவும்…