இந்தியா, இலங்கையை உளவு பார்க்க புறா: சீனா சதி!

இந்தியா, இலங்கையை உளவு பார்க்க புறா: சீனா சதி!

Share it if you like it

இந்தியா, இலங்கையை உளவு பார்க்க, சீனா புறாவை அனுப்பி இருப்பது அம்பலமாகி இருக்கிறது.

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 5 பேர், மீன்பிடிப்பதற்காக அரசபாண்டி என்பவரது நாட்டுப்படகில், கடந்த 15-ம் தேதி கடலுக்குள் சென்றனர். பாம்பனில் இருந்து 13 கிலோ மீட்டர் தொலையில் பாக் ஜலசந்தி கடலில் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, வானில் வட்டமடித்த புறா ஒன்று, திடீரென படகில் வந்து அமர்ந்து தஞ்சமடைந்தது. அந்த புறாவின் இரு கால்களிலும் 2 வளையங்கள் கட்டப்பட்டிருந்தன. ஒரு வளையத்தில், இலங்கை யாழ்ப்பாணம் சுதன் என்றும், தொலைபேசி எண் ஒன்றும் எழுதப்பட்டிருந்தது.

மற்றொரு காலில் சீன எழுத்துக்கள் பொறித்த ஸ்டிக்கர் இருந்தது. அதன் கீழே எம்.எப். 3209 என்று எழுதப்பட்டிருந்தது. இதனால், இந்தியா மற்றும் இலங்கையை உளவு பார்க்க சீனா புறாவை அனுப்பியதா என்கிற சந்தேகம் எழுந்திருக்கிறது. பின்னர், அந்தப் புறாவை பிடித்த மீனவர்கள், புறாக்களை வளர்க்கும் ரகு என்பவரிடம் ஒப்படைத்தனர். இந்த புறா ஹோமர் இனத்தைச் சேர்ந்த பந்தய புறா என்றும், இது தொடர்ந்து 300 கி.மீ. பறக்கும் திறன் படைத்தது என்றும் ரகு கூறியிருக்கிறார். உளவு பார்க்கும் புறா சிக்கி இருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


Share it if you like it