கப்பலோட்டிய தீரா் திரு. வ.உ.சிதம்பரனாா் அவா்களின் நினைவுதினம் இன்று.
ஏகாதிபத்திய வெறிபிடித்த ஆங்கிலேயர்களுக்கு சிம்மசொப்பனமாக ‘சுதேசி கப்பல்’ விட்டு மிரள வைத்தவா்.பரங்கியனை மிரள வைத்த அந்த கப்பல் கம்பெனியின் பெயர் “ஸ்வதேஷி ஸ்டீம் நேவிகேசன் கம்பெனி” பல கோடி மதிப்புள்ள தன் சொத்துக்கள் முழுவதையும் தேசவிடுதலைக்காகவே அா்பணித்தவா்.
பேச்சாற்றலும், எழுத்தாற்றலும் ஒருங்கே அமையப் பெற்றவர். தமிழகத்தில் தொழிற்சங்கத்தை முதலில் தோற்றுவித்தவர்.இவருக்கு தோளுக்கு தோழாய் திரு. சுப்ரமணிய சிவம் அவர்கள் இருந்தார்கள். திலகரின் தென்னகத்து போர்வாள்களான #வஉசி மற்றும் #சுப்ரமணிய_சிவா அவர்களும் கவிதை சித்தர் சுப்ரமணிய பாரதி அவர்களும் நெருங்கிய நண்பர்கள். இவர்கள் மூவேந்தா்களாய் பரங்கிய அரசிற்க்கு சிம்ம சொப்பனமாய் விளங்கி அவர்களின் ஏகாதிபத்தியத்திற்கு மரணஅடி கொடுத்து வந்தனர்.
ஏகாதிபத்திய பிரிட்டிஷ் அரசு விடுத்த மிரட்டல்களுக்கும் சரி ஆசை வாா்த்தைகளுக்கும் சரி ,அசைந்து கொடுக்காதவா். வ. உ .சி. அவர்கள் சிறையிலிருந்த போது தாங்க முடியாத கடன் சுமையால் அவர் உருவாக்கிய சுதேச கப்பல் நிர்வாகம் கப்பலை பரங்கிய அரசிடமே விற்றுவிட்டது. இதை கேள்வியுற்ற வஉசி அவர்கள் இதற்கு பதில் அந்த கப்பலை நாமே முழ்கடித்திருக்கலாமே பரங்கியனிடம் பணிந்து போவதா என மனம் வெதும்பினார்.
ஆங்கிலேயர் அரசாங்கம் அவரை சிறையில் அடைத்த போது 50 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட மக்கள் வௌ்ளமென திரண்டு அவருக்கு பிாியாவிடை கொடுத்தனா், அதே தண்டனை முடிந்து அவர் விடுதலையடைந்த போது வரவேற்க தான் யாருமில்லை! இந்த சுயநலம் பிடித்த மக்களுக்காகவா போராடினேன் என்று அவா் மறந்தும் சிந்தித்தது கடையாது. வாழ்நாள் இறுதிவரை தேச விடுதலை வேண்டி ஸ்வராஜ்ய மற்றும் ,ஆன்மீக சிந்தனையோடு வாழ்நதவர்.
- திரு. ரஞ்சீத்.vc