கிறிஸ்தவ மதபோதகர் மோகன் சி லாசரஸ் பல்நோக்கு மருத்துவமனை திறந்திருக்கும் நிலையில், இயேசு குணமளிக்கும் போது எதற்காக மருத்துவமனை திறந்தார் என்று நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடியில் இயேசு விடுவிக்கிறார் என்கிற பெயரில் கிறிஸ்தவ சபை நடத்தி வருகிறார் மோகன் சி லாசரஸ். இவர், ஹிந்துக் கடவுள்களை சாத்தான் என்று சொல்லியும், ஹிந்து மதத்தின் புனிதமாகக் கருதப்படும் பகவத்கீதையை பற்றி விமர்சித்தும் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியவர். 2019 நாடாளுமன்றத் தேர்தலின்போது பிரதமர் மோடி தோல்வியடைய வேண்டும் என்பதற்காக சிறப்பு வழிபாடு நடத்தியவர். இயேசுவுக்கு எவ்வளவு அதிகமாக காணிக்கை செலுத்துகிறீர்களோ அந்தளவுக்கு ரட்சிப்பார் என்று சொல்லி, கடும் விமர்சனத்துக்கு ஆளானவர்.
இவர்தான், நாலுமாவடியில் நாசரேத் மெயின் ரோட்டில் புதுவாழ்வு பன்னோக்கு மிஷன் மருத்துவமனை என்கிற பெயர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை கட்டி திறப்பு விழா நடத்தி இருக்கிறார்ர. இத்திறப்பு விழாவில், தி.மு.க.வைச் சேர்ந்த எம்பி. கனிமொழி, தமிழக அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கீதாஜீவன் ஆகியோர் கலந்து கொண்டு மருத்துவமனையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்திருக்கிறார்கள். இப்படி மோகன் சி லாசரஸ் மருத்துவமனை திறந்திருப்பதுதான் நெட்டிசன்கள் மத்தியில் கேலி கிண்டலுக்கு ஆளாகி இருக்கிறது.
அதாவது, நோய்வாய்ப் பட்டால் இயேசு குணப்படுத்துவார் என்று சொல்லி, பல வருடங்களாக ஜெபக் கூட்டம் நடத்தி வருகிறார் மோகன் சி லாசரஸ். அப்படி இருக்க எதற்காக மருத்துவமனை திறந்திருக்கிறார். அப்படியானால் இயேசு வியாதியை குணப்படுத்த மாட்டாரா? என்று கேள்வி எழுப்பியும், தனது தவ வலிமையால் தீராத நோய்களை எல்லாம் தீர்த்து வைக்கும் மோகன் சி லாசரஸ் நோயாளிகளை குணப்படுத்த மருத்துவமனனை திறந்திருக்கிறார் எனவும் பலவாறாக வறுத்தெடுத்து வருகின்றனர் நெட்டிசன்கள்.