பெண்களின் ஆடை சுதந்திரத்தை தரக்குறைவாக விமர்சனம் செய்த கிறிஸ்தவ மதபோதகர்..!

பெண்களின் ஆடை சுதந்திரத்தை தரக்குறைவாக விமர்சனம் செய்த கிறிஸ்தவ மதபோதகர்..!

Share it if you like it

பெண்களின் ஆடை சுதந்திரத்தில் தலையிட்ட கிறிஸ்தவ மதபோதகருக்கு வலுக்கும் எதிர்ப்பு.

முகநூலை பயன்படுத்தும் இஸ்லாமிய பெண்கள் நரகத்திற்கு செல்வார்கள், உண்மையான இஸ்லாமியர்கள் அதனை பயன்படுத்த மாட்டார்கள் என சில தினங்களுக்கு முன்பு இஸ்லாமிய மதகுரு மௌலானா ஷம்சுதீன் காசிமி அவர்கள் தனது கடும் கோவத்தை வெளிப்படுத்தி காணொளி ஒன்றினை பதிவு செய்தார். இது இஸ்லாமிய மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை உருவாக்கியது.  

இந்த சூழ்நிலையில் கிறிஸ்தவ மக்களுக்கு நல்ல போதனைகளை கூறி அவர்களை நல்வழியில் திருப்ப வேண்டிய கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர், பெண்களின் ஆடை சுதந்திரத்தில் தலையிட்டு கருத்து தெரிவித்து இருப்பது. மக்கள்
மத்தியிலும், சமுதாயத்திலும், பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. 

ஒருபுறம் முகநூல் பயன்படுத்த கூடாது என்று, இஸ்லாமிய மதகுரு அறிவுரை, மறுபுறம் பெண்களின் ஆடை
சுதந்திரத்தில் தலையிட்டு கருத்து கூறிய பாதிரியார் என தொடர்ந்து இது போன்று பெண்களை மையமாக வைத்து பல காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சமஉரிமை, பெண் விடுதலை, என தொடர்ந்து மக்களுக்கு பாடம் நடத்தி வரும் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி , திராவிடர் கழகம், திமுக எம்பி கனிமொழி, கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவாளர் சுந்தரவள்ளி, உட்பட யாரும் இது போன்ற மதகுருமார்களை கண்டிக்கவோ, விமர்சனமோ, ஏன்? செய்யவில்லை  என்பது மில்லியன் டாலர் கேள்வி.

ஹிந்து மதத்தை சேர்ந்த ஒருவர் இவ்வாறு பேசி இருந்தால் இந்நேரம் மேற்கூறிய நபர்கள் சும்மா இருந்திருப்பார்களா? என்பதை தமிழக மக்கள் இப்பொழுதாவது புரிந்து கொள்ள வேண்டும் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.   

 

 

 

 

 


Share it if you like it