போக்ஸோவில் மதபோதகர் கைது: சர்ச்சுக்கு சீல் வைக்காமல் தாமதிப்பது ஏன்? சமூக சேவகி கேள்வி!

போக்ஸோவில் மதபோதகர் கைது: சர்ச்சுக்கு சீல் வைக்காமல் தாமதிப்பது ஏன்? சமூக சேவகி கேள்வி!

Share it if you like it

‘போக்ஸோ சட்டத்தில் மதபோதகர் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், அவர் அனுமதி பெறாமல் நடத்தும் சர்ச்சுக்கு சீல் வைக்காதது ஏன் என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.

இதுகுறித்து சமூக சேவகியும், தடை தாண்டுதல் போட்டியில் தேசிய அளவில் தங்கப் பதக்கம் வென்றவரும், நடிகையுமான எமி கூறுகையில், “இலங்கையைச் சேர்ந்த ஷெரார்டு, அவரது மனைவி ஹெலன் ஆகியோர், ஆதம்பாக்கத்தில் ஏ.சி.ஏ. ஜீசஸ் மிராக்கஸ் மினிஸ்ட்ரீஸ் என்கிற பெயரில் அனுமதி பெறாமல் சர்ச் நடத்தி வருகின்றனர். இதற்காக, 650 சதுர அடி ஓடை புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து சர்ச்சும், ஹோட்டல் கேட்டரிங் சமையல் கூடமும் நடத்தி வருகின்றனர். மேலும், அந்த இடத்திற்கு முறைகேடாக மின் இணைப்பும் பெற்று வணிக நோக்கில் மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது.

இந்த நிலையில், கடந்தாண்டு சர்ச்சுக்கு வந்த சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக ஷெரார்டு மனோகரும், அவருக்கு உடந்தையாக இருந்ததாக அவரது ஹெலன் மற்றும் அவர்களது கார் டிரைவர் ஜீவா ஜேக்கப் என்கிற ஜீவானந்தம், பெண் ஊழியர் விஜயலட்சுமி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில், ஷெரார்டு, ஹெலன் ஆகியோர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். மேற்கண்ட சம்பவங்கள் அனைத்தும் ஷெரார்டு, ஹெலன் ஆகியோரின் சர்ச் மற்றும் வீடு, சமையல் கூடம் ஆகிய இடங்களில்தான் அரங்கேறியது.

ஆகவே, சர்ச்சுக்கு சீல் வைக்குமாறு சமூக நலத்துறை, வருவாய்த் துறை செயலர்களை சந்தித்து மனு அளிக்கப்பட்டது. மேலும், சென்னை கலெக்டர் அமிர்தஜோதியை 5 முறை சந்தித்தும், தென்சென்னை ஆர்.டி.ஓ., ஆலந்துார் தாசில்தாரா ஆகியோரிடமும் மனு அளித்தோம். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, சர்ச்சுக்கு சீல் வைக்கக் கோரி 12 பேர் உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்துள்ளோம். இதனிடையே, சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்திருக்கும் ஷெரார்டு, ஹெலன் தம்பதியர், சர்ச் இருக்கும் இடத்தை விற்கும் நோக்கில், ஜன்னல், கதவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். எனவே, மேற்படி ஏ.சி.ஏ. ஜீசஸ் மிராக்கஸ் மினிஸ்ட்ரீஸ் சர்ச்சுக்கு சீல் வைக்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.


Share it if you like it