நடிகர் கமலஹாசன் ஆதரித்தது எதுவுமே உருப்பட்டதா சரித்திரமே இல்லை என்று தயாரிப்பாளர் ராஜன் அதிரடியாக தெரிவித்திருக்கிறார்.
நடிகராக இருந்த கமலஹாசன், 2018-ம் ஆண்டு முதல் அரசியல்வாதியாகவும் அவதாரம் எடுத்திருக்கிறார். மக்கள் நீதி மய்யம் என்கிற பெயரில் கட்சியைத் தொடங்கினார். இவர் கட்சி ஆரம்பித்து 5 வருடங்களை கடந்த நிலையில், அவரது கட்சியினர் வார்டு கவுன்சிலர் தேர்தலில்கூட வெற்றிபெற்றதில்லை. அவ்வளவு ஏன், 2021 சட்டமன்றத் தேர்தலில் கோவை தெற்குத் தொகுதியில் போட்டியிட்ட கமலஹாசன், வானதி சீனிவாசனிடம் தோல்வியடைந்தார். இதனால் கடும் விரக்தியில் இருந்து வந்த கமலஹாசன், தற்போது நடந்து முடிந்த ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி வேட்பாளர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார். அதோடு, தேர்தல் பிரசாரமும் செய்தார்.
இந்த நிலையில்தான், சினிமா தயாரிப்பாளரான ராஜன், அமீனா புகுந்த வீடு எப்படி உருப்படாதோ, அதேபோல கமல் போகும் இடமும் சரி, ஆதரவு தெரிவித்தாலும் சரி, அது நிச்சயமாக உருப்படாது என்று அதிரடியாகக் கூறியிருக்கிறார். மேலும், இதற்கு சில உதாரணங்களையும் கூறியிருக்கிறார். கமலை பற்றி தயாரிப்பாளர் ராஜன் அப்படி என்னதான் சொன்னார்? தெரிந்துகொள்ள கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்…