குடியுரிமை திருத்தச் சட்டத்தின் (CAA) கீழ் 300 பேருக்கு குடியுரிமைச் சான்றிதழினை மத்திய அரசு நேற்று வழங்கியது,
மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா 14 நபர்களுக்கு டெல்லியில் நடந்த ஒரு விழாவில் அவர்களின் விண்ணப்பங்கள் நியமிக்கப்பட்ட போர்டல் மூலம் ஆன்லைனில் செயலாக்கப்பட்ட பின்னர் சான்றிதழ்களை வழங்கினர். முறையாக விண்ணப்பிக்கப்பட்ட 300 தகுதியான நபர்களுக்கு மின்னஞ்சல் மூலம் குடியுரிமை சான்றிதழ் அனுப்பப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
“உள்துறை செயலாளர் குடியுரிமைச் சான்றிதழினை பெற்றவர்களை வாழ்த்தினார் மற்றும் குடியுரிமை (திருத்தம்) விதிகள், 2024 இன் முக்கிய அம்சங்களை எடுத்துரைத்தார்.
“2013 முதல் நான் இங்கு வசித்து வந்தாலும், இன்று நான் இந்த நாட்டைச் சேர்ந்தவன் என்று உணர்கிறேன். நான் இப்போது சுதந்திரமாக அதை என் சொந்தம் என்று அழைக்கலாம் மற்றும் எந்த அச்சமும் இல்லாமல் இந்த நாட்டில் எங்கும் சுற்றித் திரிகிறேன், ”இவ்வாறு குடியுரிமை சான்றிதழ் பெற்ற 38 வயதான பாகிஸ்தானில் உள்ள சிந்துவைச் சேர்ந்த அகதியான சீத்தல் தாஸ் கூறினார். இப்போது வடக்கு டெல்லியில் வசித்து கொண்டிருப்பதாக கூறினார்.
பல ஆண்டுகளாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி மற்றும் உரிமைகளை வழங்கியதற்காக பிரதமர் மோடிஜிக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எனது அகதிகள் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் மோடி அரசாங்கம் CAA மூலம் குடியுரிமை வழங்கும் என்று நான் உறுதியளிக்கிறேன், ”என்று குடியுரிமை சான்றிதழ் பெற்ற ஷா என்பவர் கூறினார்.
இந்தி கூட்டணி கட்சியினர் குடியுரிமை திருத்த சட்டத்தை இந்தி கூட்டணி ஆளும் மாநிலங்களில் அமல்படுத்த மாட்டோம். சிஏஏ குடியுரிமையை பறிக்கவும் சட்டம் என்று பொய்யான கருத்துக்களை மக்களிடையே பரப்பி வந்தனர். ஆனால் தற்போது மத்திய அரசு 300 நபர்களுக்கு குடியுரிமையை வழங்கியுள்ள நிகழ்விற்கு என்ன சொல்ல போகின்றனர்.