சுற்றுச்சூழலை பாதுகாக்கும் ஆவணி மாத களிமண் சிலை வழிபாடு

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் ஆவணி மாத களிமண் சிலை வழிபாடு

Share it if you like it

பொதுவாக ஆடி மாதத்தில் பெருக்கெடுத்து வரும் பெரும் வெள்ளம் நதிகள் ஆறு குளம் அனைத்தையும் நிரப்புவதோடு ஆர்ப்பரித்து வரும் வெள்ளத்தின் வேக ஓட்டத்தின் அதில் தேங்கிக் கிடக்கும் மணல்- மணல் படிமங்களை மேலோட்டமாக அடித்துச் சென்று விடும் .பெருமளவில் பெருமனல்களை நிரம்பிக் கிடக்கும். இந்த நிலையில் ஆவணி மாதத்தில் ஊர் தோறும் களிமண்ணில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு செய்து அதை விஜர்சனம் செய்யும் வகையில் நீர் நிலைகளில் கரைத்து விடும்போது அதிலிருந்து கரைந்து போகும் களிமண் படிமங்கள் அந்த நீர் நிலைகளின் அடியில் ஒரு பாதுகாப்பு திட்டை ஏற்படுத்தும். அது அந்த நீர் நிலைகளில் நீர் உறிஞ்சும் தன்மையை அதிகரித்து நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாக்கும் . மேலும் அடுத்து வரும் மழைப்பொழிவில் காரணமாக வரும் வெள்ளம் நீர் நிலை உயரவும் கரைகள் பலப்படவும் வறட்சி காலங்களில் அந்தப் பகுதி மக்களின் குடிநீர் ஆதாரத்தையும் உறுதி செய்யும்.

நம் முன்னோர்களின் ஆன்மீகமும் அறிவியலும் இந்த மண்ணையும் மக்களையும் நலமும் வளமும் பெறச் செய்யும் ஒரு வழிகாட்டியாக மட்டுமே இருந்ததே தவிர மத அடிப்படையில் அல்லது மதம் சித்தாந்தம் என்ற பெயரில் மாற்றாரை துன்புறுத்தும் வகையிலும் எப்போதும் இருந்ததில்லை. இந்த மண்ணின் தர்மமும் தார்பாரியமும் உலகில் உயிர்கள் யாவும் எல்லாம் பெற வேண்டும் என்ற உயர்ந்த தத்துவத்தையே அடிப்படையாகக் கொண்டது. அந்த வழியில் வந்த முன்னோர்களின் வாழ்வுகளும் வழிபாடுகளும் கூட தங்களின் நலன் பாதுகாப்பு என்பதை கடந்து பூமியின் இயக்கத்திற்கு அத்தியாவசியமான சுற்றுச்சூழல் சூழலில் பல்லுயிர் பாதுகாப்பு என்று அனைத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து வாழ்ந்தார்கள்.

நம் முன்னோர்களின் பண்டிகை கொண்டாட்டங்களும் அவர்கள் முன்னெடுத்த பூஜை வழிப்பாட்டு முறைகளும் வெறும் ஆன்மீக உணர்வுகளின் வெளிப்பாடு மட்டுமல்ல. அதைக் கடந்து சுற்றுச்சூழல் சூழலியல் சங்கிலி பல்லுயிர் மேம்பாடு மக்களின் நலமும் வளமும் காக்கும் பொருளாதார பன்முகம் என்று பல்வேறு உயிரோட்டம் உள்ள விஷயங்களை முன்னிறுத்தியே அந்த பூஜைகள் வழிபாட்டு முறைகள் இருந்தது .அதில் முக்கிய இடம்பெறுவது நீர் நிலைகளை பாதுகாக்கும் ஆவணி மாத விநாயகர் சதுர்த்தியின் போது முன்னெடுக்கும் களிமண் சிலை வழிபாடு.

ஊர் தோறும் அவரவர் வசதிக்கு ஏற்ப வீதிக்கு ஒன்று வீட்டிற்கு ஒன்று ஊருக்கு ஒன்று என்று பல்வேறு எண்ணிக்கையில் பெருமளவில் இந்த விநாயகர் சதுர்த்தி களிமண் உருவங்கள் வைத்து பூஜைக்கப்படுகிறது. மூன்று முதல் ஐந்து நாட்கள் பூஜையில் இருக்கும் இந்த களிமண் உருவங்கள் இந்த ஆவடி மாத மிதமான வெப்பத்தில் ஓரளவு பதப்பட்டு விடும். ஐந்தாம் நாள் விமர்சனம் என்ற பெயரில் ஊர் மக்கள் ஒன்று கூடி குழுவாக சிலைகளைக் கொண்டு போய் ஊரைச் சுற்றி இருக்கும் குளங்கள் குட்டைகள் ஆறுகள் ஏரிகள் என்று பல்வேறு நீர் நிலைகளில் முழுமையாக கரைத்து விடுவார்கள் இதன் மூலம் அத்தனை நீர் நிலைகளிலும் பெருமளவு களிமண் படிவம் கொண்டு சேர்க்கப்படும்.

இந்தக் களிமண் படிவம் நீர் நிலைகளின் கரைகளை பலப்படுத்துவதோடு நீர் உறிஞ்சும் தன்மையை அதிகரிக்கிறது. ஆடி மாத வெள்ளத்தில் அடித்துக் கொண்டு போன சிறு மண் படிவங்கள் சிறு மணல் படிவங்களை இந்த களிமண் மூலம் நீர்நிலைகள் மீட்டெடுத்துக் கொள்ளும். மேலும் இந்த களிமண் படிவங்கள் எல்லாம் நீர் நிலைகளின் அடிப்பகுதி பக்கவாட்டு கரைகள் என்று அனைத்தையும் ஒரு மேல் பூச்சு போல பூசிக்கொள்ளும். இதன் மூலம் ஆடி மாத பெரு வெள்ளத்தில் பலம் இழந்த கரைப்பகுதிகள் கூட மீண்டும் பலமாகும். புரட்டாசி முதல் கார்த்திகை மாதம் வரை தொடரும் அடை மழை காலத்தில் வரும் பெரும் வெள்ளம் இந்த நீர் நிலைகளில் பெருமளவு வெள்ள நீர் உறிஞ்சப்படும் .நிலத்தடி நீர் பாதுகாக்கப்படுவதோடு கரைப்பகுதிகள் பலப்படும் பட்சத்தில் வெள்ளத்தால் ஏற்படும் சேதங்கள் இழப்புகளையும் தடுப்பதற்கு ஒரு இயற்கை அரணாக இருந்தது.

அந்த வகையில் நம் முன்னோர்கள் பூமியையும் ஆகாயத்தையும் உள்ளடக்கிய பஞ்சபூதங்களையும் வணங்கினார்கள். இந்த பஞ்ச பூதங்களின் மூலாதாரமான நவகிரகங்களையும் வணங்கினார்கள். அனைத்திற்கும் மேலாக ஒரு பிடி மண்ணையும் ஒரு கையளவு பசும் சாணத்தையும் கூட பிடித்து வைத்து அதையே முழு முதல் கடவுளான பிள்ளையாரின் அம்சமாக அஸ்திவாரம் தோண்டும் பூமி பூஜை முதல் விதைக்கும் நாள் வரை வேண்டுதல் பூஜையாக செய்தார்கள்.மனை கிரகப்பிரவேசம் முதல் அறுவடை திருநாளில் நன்றி கூறும் திருவிழா வரை பெரும் திருவிழாக்களை பண்டிகை உற்சவங்கள் கொண்டாடி மகிழ்ந்தார்கள். இதன் மூலம் இருப்பதை பகிர்ந்து அளித்து இல்லாததை உருவாக்கும் ஒற்றுமையை வளர்த்து தங்களின் வாழ்வாதாரத்தையும் பூமியின் பல்லுயிர் சுழற்சியையும் பாதுகாத்துக் கொண்டார்கள்.


Share it if you like it